இறுதிச் சடங்கிற்கு சென்ற படகு நீரில் கவிழ்ந்து விபத்து: 24 பேரின் உடல்கள் மீட்பு
Boat Capsizes in Southern Nigeria at least 24 dead: தெற்கு நைஜீரியாவில் படகு கவிழ்ந்த விபத்தில் குறைந்தது 24 பேர் வரை உயிரிழந்துள்ளனர்.
படகு கவிழ்ந்து 24 பேர் உயிரிழப்பு
தெற்கு நைஜீரியாவின் தெற்கு மாகாணமான பயல்சாவில்(Bayelsa) வெள்ளிக்கிழமை எதிர்பாராத விதமாக நீரில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
Ayama நகரில் இருந்து Ukubie என்ற பகுதியில் நடந்த இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக படகில் சென்ற போதே இந்த விபத்தானது ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் இதுவரை 24 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு இருப்பதாகவும், காணாமல் போனவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் அந்நாட்டின் தேசிய அவசரகால மேலாண்மை முகமையின் செய்தி தொடர்பாளர் மன்சோ எசேக்கியேல் உறுதிப்படுத்தியுள்ளார்.

படகில் பயணித்தவர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆரம்பக் கட்ட தகவல்கள் படி, படகு நீரில் மூழ்கியதற்கு இயந்திரக் கோளாறே காரணமாக இருக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
இந்த படகு விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தன்னுடைய ஆழ்ந்த இரங்கலை நைஜீரிய அதிபர் போலா டினுபு தெரிவித்துள்ளார்.