நடுவானில் மோதிக்கொள்ளவிருந்த இரு விமானங்கள் (உலக செய்திகளின் தொகுப்பு)
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் கடந்த காலங்களில் பெய்த கன மழை காரணமாக கடுமையான புயல் வீச ஆரம்பித்துள்ளது, இதனால் புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பெலாரஸில் தந்திரோபாய அணு ஆயுதங்களை நிலைநிறுத்த ரஷ்யா திட்டமிட்டுள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் தெரிவித்துள்ளார்.
ஏர் இந்தியா விமானமும் நேபாள் ஏர்லைன்ஸ் விமானம் ஒன்றும் நடுவானில் மோதிக்கொள்ளவிருந்த நிலையில், தானியங்கி எச்சரிக்கை அமைப்பால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டுள்ளது.
பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தனது நீதித்துறை மறுசீரமைப்பு திட்டத்தை சவால் செய்ததற்காக அவரது பாதுகாப்பு அமைச்சரை, திடீரென பதவி நீக்கம் செய்துள்ளார்.
துனீஷியா கடற்பகுதியில் இரு படகுகள் கவிழ்ந்த விபத்தில் 29 குடியேற்றவாசிகள் உயிரிழந்துள்ளனர்.
இதுதொடர்பான உலக செய்திகள் தெரிந்து கொள்ள கீழ் காணும் வீடியோவை பார்க்கவும்.