லண்டன் பூங்காவில் எரிந்த நிலையில் கிடந்த சடலம்; விசாரணையில் பொலிஸார்
லண்டன் பூங்காவில் தீயில் எரிந்த நிலையில் உடல் கண்டெடுக்கப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
மேற்கு லண்டன் பூங்கா ஒன்றில் தீப்பற்றி எரிந்த நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பெருநகர பொலிசார் தெரிவித்துள்ளனர்.
உள்ளூர் நேரப்படி, இன்று அதிகாலை 4.30 மணியளவில், நோர்டோல்ட், பெல்வ்யூ பூங்காவில் சடலத்தை பார்த்த பொதுமக்கள் பொலிஸாரை அழைத்தனர்.
ஆண் என நம்பப்படும் சடலத்தை அடையாளம் கண்டு, அவர்களது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.
இதையும் படிங்க: பிரித்தானியாவில் பயங்கர தீவிபத்து! களத்தில் நூற்றுக்கணக்கான தீயணைப்பு வீரர்கள்..
சம்பவம் நடந்த இடத்தை சுற்றிவளைத்த பொலிஸார், இந்த மரணம் தொடர்பில் தற்போது எந்த விளக்கமும் அளிக்கப்படமுடியாது என்றும், இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் தெரிவித்துள்ளனர்.
இதேபோன்று, தீப்பிடித்து எரிந்த நிலையில் ஒரு சடலம் இந்த மாத தொடக்கத்தில் கிழக்கு லண்டனில் கண்டுபிடிக்கப்பட்டது.
கடந்த வியாழன் அதிகாலை 2.20 மணியளவில் கிழக்கு ஹாமில் உள்ள சென்ட்ரல் பார்க் பகுதிக்கு லண்டன் தீயணைப்புப் பிரிவினர் ஒருவர் காயமடைந்ததாகத் தெரிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அப்பாவி மக்கள் தஞ்சமடைந்துள்ள இரசாயன ஆலை மீது ரஷ்யா குண்டு மழை
அதிகாரிகள் மற்றும் மருத்துவ பணியாளர்கள் அங்கு சென்றனர், ஆனால் அந்த நபர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது.
இப்போது, பெல்வ்யூ பூங்காவில் மீண்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்துள்ளதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவுகிறது.