சாலையோரம் கிடந்த உடல் உறுப்பு: மாணவன் கொடுத்த தகவலை தொடர்ந்து பொலிசார் நடவடிக்கை
இங்கிலாந்தில், பள்ளிக்குச் சென்றுகொண்டிருந்த மாணவன் ஒருவன் சாலையோரமாக கிடந்த வித்தியாசமான பொருளைக் கண்டு சந்தேகமடைந்து பொலிசாருக்கு தகவலளித்துள்ளான்.
சாலையோரம் கிடந்த உடல் உறுப்பு
இங்கிலாந்தின் Southamptonஇல் வாழும் Jamie Clarke (15) என்னும் மாணவன், தன் நண்பர்களுடன் பள்ளிக்குச் சென்றுகொண்டிருக்கும்போது, சாலையோரமாக ஏதோ கிடப்பதைக் கண்டு, அது மனித உடல் உறுப்பாக இருக்கலாம் என சந்தேகம் ஏற்பட்டதால் பொலிசாரை அழைத்துள்ளான்.
Credit: Solent
விரைந்து வந்த பொலிசார், அது ஒரு தொப்புள் கொடி என்பதைக் கண்டுபிடித்தனர். அது சமீபத்தில் பிறந்த குழந்தை ஒன்றின் தொப்புள் கொடியாக இருக்கலாம் என்பதால், குழந்தையையும் அதன் தாயையும் அவர்கள் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
குற்றம் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் தாங்கள் நடவடிக்கையில் இறங்கவில்லை என்று கூறியுள்ள பொலிசார், அந்த தாய் மற்றும் சேயின் நலன் கருதியே அவர்களைத் தேடிவருவதாகத் தெரிவித்துள்ளனர்.
Credit: Solent
மோப்ப நாய் உதவியுடன் தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ள பொலிசார், அந்த பகுதிக்கருகிலுள்ள வீடுகளுக்குச் சென்றும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |