உடம்பில் ஏறி போன சர்க்கரை அளவை சரசரவென குறைக்க! எளிதான வழிகள் இருக்கே
ஒரு சமயம் வரையில் வயதானவர்களுக்கு மட்டும் ஏற்படும் சர்க்கரை நோய் பிரச்சனை தற்போது இளம் வயதினருக்கும் அதிகம் ஏற்படுகிறது.
சர்க்கரை அளவை குறைக்க
சர்க்கரை நோயாளிகள் வாழ்க்கை முறையிலும், உணவு முறைகளிலும் சில மாற்றங்களை மேற்கொண்டால் சர்க்கரையின் அளவை குறைக்க முடியும்.
சர்க்கரை நோய் பாதிக்கப்பட்ட பலர் வெள்ளைச் சர்க்கரைக்குப் பதிலாக நாட்டு சர்க்கரை, பனங்கற்கண்டு, வெல்லம் போன்றவற்றைப் பயன்படுத்துகின்றனர். ஆனால், இவை அனைத்துமே நேரிடையாகவும், மறைமுகமாகவும் நம்முடைய உடலுக்கு இனிப்பை தரும்.
medicalnewstoday
மாவு சத்துள்ள உணவுகளை முடிந்தவரைத் தவிர்க்க வேண்டும். மாவுச்சத்து உள்ளது என்றால் வெறும் அரிசி மட்டுமல்ல, இட்லி, தோசை சப்பாத்தியும் கூட.
காய்கறிகள்
காய்கறிகள் அதிகமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதுவும் மண்ணுக்கடியில் விளையாத காய்கறியாக இருத்தல் அவசியம்.
மன அமைதி மிகவும் முக்கியம் என்பதோடு, கண்டிப்பாக 7 மணி நேரம் தூங்க வேண்டும்.
முக்கனிகள் வேண்டாம்
மிக முக்கியமாக மா, பலா, வாழை ஆகிய முக்கனிகளை தொடாமல் இருப்பது நல்லது. இவை உடலுக்கு இனிப்பு சக்தியைக் கொடுக்கும் என்பதை மறவாதீர்கள்.
துளசி இலைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. இந்த இலைகளில் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, அவை உடலுக்கு நல்லது.
makatimed