பிரான்ஸ் பிரதமர் எடுத்த இப்படி ஒரு முடிவு! தைரியமாக போட்டுக் கொண்ட AstraZeneca தடுப்பூசி: வைரலாகும் புகைப்படம்
பிரான்ஸ் மக்களின் நன்மைக்காக பல்வேறு சர்ச்சைகளுக்கு உள்ளான கொரோனா தடுப்பூசியான AstraZeneca-வை பிரதமர் போட்டுக் கொண்டார்.
கொரோனா என்னும் கொடிய வைரஸ் உலகின் பல்வேறு நாடுகளில் பரவி, கோடிக்கணக்கான உயிர்களை எடுத்து வருகிறது. இதனால் அதைக் கட்டுப்படுத்துவதற்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் ஐரோப்பிய நாடுகளில் AstraZeneca என்னும் தடுப்பூசி போடப்பட்டது. இதில் பிரான்சும் இருந்தது.
ஆனால் இந்த தடுப்பூசி காரணமாக பல்வேறு பக்கவிளைவுகள் ஏற்படுவதாக கூறப்பட்டதால், பிரான்சில் இந்த தடுப்பூசி தற்காலிகமாக தடை செய்யப்பட்டது.
இந்த ஊசியை போட்டுக் கொண்ட சிலர் பயத்தில் இருந்தனர். இதையடுத்து, ஐரோப்பிய மருத்துவ ஸ்தாபனம் வழங்கிய அறிக்கையின் அடிப்படையில், இன்று வெள்ளிக்கிழமை நண்பகலில் இருந்து இந்த AstraZeneca தடுப்பூசிகள் மீண்டும் பிரான்சில் போட ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதில், முதல் தடுப்பூசியை 55 வயதுடைய பிரதமர் Jean Castex போட்டுக்கொண்டார். நான் எதையுமே வித்தியாசமாக உணரவில்லை என்று கூறினார்.
மேலு, இந்த AstraZeneca தடுப்பூசி முதன் முதலாக பிரான்சுக்கு கொண்டுவரப்பட்டபோது, சுகாதார அமைச்சரே முதன் முதலாக போட்டுக்கொண்டது நினைவுகூரத்தக்கது.