பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மருத்துவமனையில் அனுமதி
நடிகர் அமிதாப் பச்சன் வெள்ளிக்கிழமை காலை மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மருத்துவமனையில் அமிதாப் பச்சன்
பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் மும்பையில் உள்ள கோகிலாபென் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
81 வயதான நடிகர் ஆஞ்சியோபிளாஸ்டி அறுவை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவருடைய காலில் இருக்கும் பிரச்சினை காரணமாக அறுவை சிகிச்சை நடைபெறவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மருத்துவமனை தரப்பிலோ அல்லது அமிதாப் பச்சன் குடும்பத்தின் தரப்பில் இருந்தோ அவரது உடல்நிலை குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியாகவில்லை.
மேலும் இவருக்கு கடந்த ஜனவாரி மாதம் மணிக்கட்டில் அறுவை சிகிச்சை நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.