பிரான்சிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் குண்டு வெடிப்பு: விசாரணை கோரும் ரஷ்யா
பிரான்சிலுள்ள ரஷ்ய தூதரகம் ஒன்றில் குண்டு வெடிப்புச் சம்பவம் ஒன்று நிகழ்ந்துள்ள நிலையில், அந்த சம்பவம் தீவிரவாத சம்பவம் போன்று அமைந்திருப்பதாக ரஷ்யா தெரிவித்துள்ளது.
பிரான்சிலுள்ள ரஷ்ய தூதரகத்தில் குண்டு வெடிப்பு
பிரான்சிலுள்ள Marseille நகரத்தில் அமைந்துள்ள ரஷ்ய தூதரகத்தில் இன்று குண்டுவெடிப்பு சம்பவம் ஒன்று நிகழ்ந்தது.
ரஷ்ய உக்ரைன் போர் துவங்கி மூன்று ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ரஷ்ய தூதரகக் கட்டிடத்துக்குள் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
அந்த சம்பவம் சம்பவம் தீவிரவாத சம்பவம் போன்று அமைந்திருப்பதாக தெரிவித்துள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சகம், அந்த சம்பவம் தொடர்பில் விரிவான விசாரணை மேற்கொள்ளுமாறு பிரான்ஸ் அதிகாரிகளை வலியுறுத்தியுள்ளது.
தூதரகத்துக்குள் போத்தல் வெடிகுண்டுகள் வீசப்பட்டதாக கூறப்படும் நிலையில், இந்த தாக்குதலில் யாருக்கும் காயம் ஏற்பட்டதாக தகவல்கள் இல்லை என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |