பாலஸ்தீன ஆதரவு பேரணியில் குண்டுவெடிப்பு: உடல் சிதறி பலியான பலர்
தென்மேற்கு பாகிஸ்தானில் பாலஸ்தீன சார்பு பேரணியில் நடந்த குண்டுவெடிப்பில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயமடைந்துள்ளனர்.
குறித்த பேரணியை ஏற்பாடு செய்த ஒரு மதக் கட்சியின் தலைவரும் இந்த தாக்குதலில் கொல்லப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பலூசிஸ்டான் மாகாணத்தில் ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகே சாமன் நகரில் நடைபெற்ற பேரணியின் முடிவில் மக்கள் கலைந்து சென்ற நிலையில் திடீரென்று மோட்டார் சைக்கிள் குண்டு வெடித்துள்ளது.
இதில், ஆப்கான் தலிபான்களை ஆதரித்து வந்த மதகுரு Maulana Abdul Qadir Luni என்பவரும் கொல்லப்பட்டுள்ளார். இவரே இந்த பேரணியை முன்னெடுத்தவர் என கூறப்படுகிறது.
ஆனால் குறித்த தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் உரிமை கோரவில்லை.
இந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் 6 பேர் கொல்லப்பட்டதுடன் 13 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ப்பிக்கப்பட்டுள்ளனர்.