200 பேர் படுகொலை..! அமெரிக்க போர் விமானங்கள் பொழிந்த குண்டு மழையில் சிதைந்த நகரம்
ஆப்கானிஸ்தானில் தலிபான்களை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய வான்வழி தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக அந்நாட்டு பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Fawad Aman தகவல் தெரிவித்துள்ளார்.
ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக்க-நேட்டோ படைகள் வெளியேற தொடங்கிய நாள் முதல் தலிபான்கள் வன்முறை வெளியாட்டம் தீவிரமடைந்துள்ளது.
சனிக்கிழமையன்று, தென்மேற்கு மாகாணமான நிம்ரூஸ் மற்றும் வடக்கு மாகாணமான ஜவ்ஜான் ஆகியவற்றை கைப்பற்றியதாக தலிபான்கள் அறிவித்தனர்.
இதனிடையே Kandahar, Herat, Lashkargah மற்றும் Helmand. மாகாணங்களில் தலிபான்களின் பிராந்திய முன்னேற்றத்தை ஒடுக்க ஆப்கானிஸ்தானுக்கு போர் விமானங்களை அமெரிக்கா அனுப்பியதாக டைம்ஸ் செய்தி வெளியிட்டது.
இந்நிலையில், ஜவ்ஜான் மாகாணம் ஷெபர்கன் நகரத்தில் தலிபான்களை குறிவைத்து அமெரிக்க போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் 200-க்கும் மேற்பட்ட தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக ஆப்கான் பாதுகாப்பு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் Fawad Aman தகவல் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வான்வழி தாக்குதலில் பெரிய அளவிலான ஆயுதங்கள், வெடிப்பொருட்கள் மற்றும் 100-க்கும் மேற்பட்ட தலிபான்களுக்கு சொந்தமான வாகனங்கள் அழிக்கப்பட்டதாக Fawad Aman தகவல் தெரிவித்துள்ளார்.