மேக்ரானை மனைவி அறைந்ததற்கு ஈரானிய நடிகை காரணமா? புத்தகத்தில் வெளியான தகவல்
மேக்ரானை அவரது மனைவி அறைந்ததற்கான காரணம் குரியது புத்தகம் ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேக்ரானை அறைந்த மனைவி
பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மேக்ரான் கடந்த ஆண்டு மே மாதம் வியட்நாம் சென்றிருந்த போது, விமானத்தில் இருந்து இறங்கும் போது அவரது மனைவி பிரிஜிட் மேக்ரான் அறைந்ததாக சர்சைக்குரிய வீடியோ வைரலானது.

இது குறித்து மேக்ரானிடம் கேட்ட போது, இது ஒரு கேலியான சண்டை என பதிலளித்தார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்பும் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், புத்தகம் ஒன்றில் மேக்ரானை அவர் மனைவி அறைந்ததற்கு ஈரானிய நடிகை ஒருவர் தான் காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரானிய நடிகை
பிரான்ஸ் பத்திரிகையாளர் ஃப்ளோரியன் டார்டிஃப், 'A (Nearly) Perfect Couple' என்ற புத்தகத்தை வெளியிட்டுள்ளார்.

கோல்ஷிஃப்தே ஃபரஹானி என்ற ஈரானிய நடிகைக்கு, மேக்ரான் நீங்கள் மிகவும் அழகாக உள்ளீர்கள் என குறுஞ்செய்தி அனுப்பியதாகவும், அதனை பிரிஜிட் பார்த்தே பின்னரே அறைந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதனை அவர்களுக்கு நெருக்கமானவர்கள் கூறியதாக தெரிவித்துள்ளார். ஆனால், பிரிஜிட்டிற்கு நெருக்கமானவர்கள் இதனை மறுத்துள்ளனர்.
முன்னதாகவே மேக்ரானை தொடர்புபடுத்தி வந்த செய்திக்கு கோல்ஷிஃப்தே ஃபரஹானி மறுப்பு தெரிவித்திருந்தார்.

ஈரானில் பிறந்த 42 வயதான கோல்ஷிஃப்தே ஃபரஹானி, தற்போது பிரான்ஸில் வசித்து வருகிறார்.
கட்டாய ஹிஜாப் சட்டங்கள், ஈரான் இணைய முடக்கம் உள்ளிட்டவை குறித்து விமர்சித்து வருகிறார்.
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |