பாஸ்டன் கரீபியன் திருவிழா துப்பாக்கி சூடு: பொலிஸார் அதிரடி நடவடிக்கை
அமெரிக்காவின் பாஸ்டனில் நடைபெற்ற கரீபியன் திருவிழா மிகப்பெரிய துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவம் அரங்கேறியுள்ளது.
7 பேர் வரை படுகாயம்
சனிக்கிழமை காலை அமெரிக்காவின் பாஸ்டனில் நடைபெற்ற கரீபியன் திருவிழா பயங்கர துப்பாக்கி சூடு தாக்குதல் சம்பவம் நடந்து இருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதில் 7 பேர் வரை காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
BREAKING ? Boston Police responding to reports of mass shooting during a festival in #Dorchester pic.twitter.com/CI4i9Fwfa1
— Insider Paper (@TheInsiderPaper) August 26, 2023
அத்துடன் இதில் காயமடைந்த 7 பேருக்கும் உயிருக்கு ஆபத்தான எந்தவொரு காயமும் ஏற்படவில்லை என்று தெரியவந்துள்ளது.
மேலும் துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டு இருப்பதுடன் கைது நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக வடகிழக்கு நகர பொலிஸார் தங்களது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர்.
பொலிஸாரின் முன் அறிவிப்பு
ஆண்டு கரீபியன் திருவிழா முன்னிட்டு சனிக்கிழமை நடத்தப்படும் 2 அணிவகுப்புகளால் போக்குவரத்தில் இடையூறுகள் இருக்கலாம் என்று பாஸ்டன் பொலிஸார் முன்னரெ அறிவித்து இருந்தனர்.
இதன் முதல் அணி வகுப்பு காலை 6 மணிக்கும், இரண்டாவது அணி வகுப்பு அதிலிருந்து 2 மணி நேரங்கள் கழித்தும் நடைபெற்றது. காலை 7.44 மணிக்கு துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து முதல் அழைப்பு வந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர் என AFP தெரிவித்துள்ளது.
கடந்த ஆண்டு நடைபெற்ற கரீபியன் திருவிழா ஒருவர் உயிரிழந்தார் என உள்ளூர் ஊடகத்தில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |