ஆப்கானிஸ்தானில் பீதியில் உள்ள இந்தியர்கள்! அங்கு சிக்கி கொண்டவர்களை மீட்க விமானம் கிளம்பவிருந்த நிலையில் திடீர் சிக்கல்
ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க இன்று மதியம் மேலும் ஒரு விமானம் காபூல் செல்லவிருந்த நிலையில் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்க படைகள் வெளியானதை தொடர்ந்து, தலீபான்கள் பெரும்பான்மையான மாகாணங்களை கைப்பற்றி விட்டனர். தலைநகர் காபூலும் அவர்களது முற்றுகையில் சிக்கி இருக்கிறது.
ஆட்சி அதிகாரம் அவர்கள் வசம் செல்வதால் அங்குள்ள இந்தியர்கள் மற்றும் இந்திய தூதரகங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பாதுகாப்பு கேள்விக்குறி ஆகியுள்ளது.
Kabul airspace closed. NOTAM, i.e Notice to Airmen issued. Air India flight scheduled to depart at 1250 pm cannot operate for now. #kabul
— Vishnu Som (@VishnuNDTV) August 16, 2021
அவர்களிடையே பீதி நிலவுவதாக கூறப்படுகிறது. அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் தூதரக ஊழியர்களை வெளியேற்றும் பணி தொடங்கி விட்டது.
ஆப்கானிஸ்தானில் இருந்து நேற்று 129 பயணிகளுடன் இந்தியாவுக்கு விமானம் வந்தது.
இந்த நிலையில், இன்று நண்பகல் 12.30 மணிக்கு ஏர் இந்தியா விமானம் காபூல் செல்வதாக இருந்தது, ஆனால் அதில் ஒரு சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் காபூலின் வான் எல்லை தற்போது திடிரென மூடப்பட்டுள்ளது.அதன் காரணமாக ஏர் இந்தியா விமானம் தற்போது கிளம்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.