சிங்கத்தில் கூண்டில் சிறுவனின் அதிர்ச்சி செயல்... உயிரியல் பூங்காவில் பகீர் சம்பவம்
பாலஸ்தீனத்தில் தனியார் உயிரியல் பூங்கா ஒன்றில் சிங்கத்தின் கூண்டில் சிக்கிக்கொண்ட 6 வயது சிறுவன் கொடூரமாக கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கத்தின் கூண்டின் மீது
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் 6 வயதேயான Hamada Iqtiet என்ற சிறுவன் தமது குடும்பத்தினருடன் தனியார் உயிரியல் பூங்கா ஒன்றில் விடுமுறையை கழிக்க சென்றுள்ளதாக கூறப்படுகிறது.
Image: CEN
இந்த விவகாரம் தொடர்பில் பொலிசார் தெரிவிக்கையில், தொடர்புடைய சிறுவன் பாதுகாப்பு வேலியை கடந்து சிங்கத்தின் கூண்டின் மீது ஏறியதாகவும், இதில் சிங்கத்தின் பிடியில் சிக்கிக்கொண்டதாகவும் கூறுகின்றனர்.
ஆனால் தாயார் மற்றும் பிற குடும்ப உறுப்பினர்களுடன் வேலி அருகாமையில் நின்ற சிறுவனை சிங்கம் தாக்கியதாக சிறுவனின் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், சிங்கத்தின் அருகாமையில் பாதுகாப்பு வேலியை கடந்து சிறுவன் சென்றுள்ளது அங்குள்ள கண்காணிப்பு கமெராவில் பதிவாகியுள்ளது.
மட்டுமின்றி, காசா பகுதியில் தனியார் உயிரியல் பூங்காக்கள் பல செயல்பட்டு வந்தாலும், விலங்கு ஒன்றால் எவரேனும் கொல்லப்படுவது இதுவே முதல்முறை என கூறுகின்றனர்.
உயிரியல் பூங்காக்களுக்கு எதிர்ப்பு
இந்த நிலையில், ஏற்கனவே தனியார் உயிரியல் பூங்காக்கள் மூடப்பட வேண்டும் என எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தற்போது மீண்டும் அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
மட்டுமின்றி, தொடர்புடைய பூங்காக்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுவதில்லை என குற்றச்சாட்டும் முன்வைக்கப்படுகிறது. பல விலங்குகள் உணவில்லாமலும், மருத்துவ பராமரிப்பு இல்லாமலும் இருப்பதாக கூறுகின்றனர்.
Image: CEN
விலங்கு நலக் குழுக்கள் பல இதுபோன்ற பூங்காக்களில் இருந்து பல எண்ணிக்கையிலான விலங்குகளை மீட்டெடுத்தாலும், இன்னும் பல இரண்டு மில்லியன் மக்கள் வசிக்கும் பகுதியிலேயே உள்ளன.
இதனிடையே சிறுவன் கொல்லப்பட்ட பூங்காவை பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக மூடப்பட்டது என பொலிசார் தெரிவித்துள்ளனர்.