மொத்தம் 20 குடியிருப்புகள்... மாயமான 2 வயது சிறுவன்: குவிக்கப்பட்ட பிரெஞ்சு பொலிசார்
தெற்கு பிரான்சில் தாத்தா பாட்டியுடன் விடுமுறையை கழித்து வந்த 2 வயது சிறுவன் திடீரென்று மாயமாகியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விளையாடியபடி இருந்த சிறுவன்
பிரான்சில் Alpes-de-Haute மாகாணத்தில் Le Vernet பகுதியில் தொடர்புடைய சம்பவம் நடந்துள்ளது. சனிக்கிழமை தோட்டத்தில் விளையாடியபடி இருந்த சிறுவன் திடீரென்று மாயமானதாக கூறப்படுகிறது.
@rex
Le Vernet நகர மேயர் தெரிவிக்கையில், அந்த குடும்பம் நகரை சுற்றிப்பார்க்க கிளம்பிய நிலையில், சிறுவன் மாயமானது தெரிய வந்துள்ளதாக குறிப்பிட்டார். மேலும், சிறுவனை கடத்தி சென்றார்களா என்பது தொடர்பில் எந்த அறிகுறியும் இல்லை எனவும், இப்பகுதியில் வெறும் 20 குடியிருப்புகளே அமைந்துள்ளது என்றும் மேயர் குறிப்பிட்டுள்ளார்.
சிறுவன் தூரமாக சென்றிருக்கலாம், அல்லது எங்கேனும் ஒளிந்திருக்கலாம், அல்லது வழி தவறியிருக்கலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். உள்ளூர் நேரப்படி மாலை 5.15 மணியளவில் தான் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
@AFP
உதவ முன்வர வேண்டும்
இதனையடுத்து பொலிசார் களமிறக்கப்பட்டு, தீவிர தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. ஹெலிகொப்டர், ட்ரோன் விமானங்கள் மற்றும் மோப்ப நாய்களும் பயன்படுத்தப்பட்டுள்ளது.
3 அடி உயரம் கொண்ட சிறுவன், பழுப்பு நிற கண்கள் மற்றும் பொன்னிற முடியுடன், மஞ்சள் நிற மேல் சட்டை, வெள்ளை ஷார்ட்ஸ் அணிந்திருப்பதாக பொலிசார் கூறினர். சிறுவன் தொடர்பில் தகவல் தெரியவரும் அப்பகுதி மக்கள் பொலிசாருக்கு உதவ முன்வர வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
@Rex
| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |