இறுதிவரை முகத்தை பார்க்கவில்லை! இதயத்தை இழந்த காதலியால் காதலன் எடுத்த விபரீத முடிவு
கள்ளக்குறிச்சியின் மேலத்தேனூர் கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன்(வயது 26), புகைப்பட கலைஞரான இவர் பெத்தநாயக்கன் பாளையத்தில் ஸ்டூடியோ நடத்தி வருகிறார்.
இவருக்கு பேஸ்புக் மூலம் பூமிகா என்ற பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது, முதலில் இருவரும் நண்பர்களாக பழகினாலும் நாளடைவில் காதல் மலர்ந்தது.
எனினும் ஒருதடவை கூட இருவரும் நேரில் சந்தித்தது இல்லை, முகத்தை பார்த்துக்கூட பேசியது இல்லை.
ஆனால் ஒருவர் மீது ஒருவர் ஆழமான காதலை கொண்டிருந்தனர், இந்நிலையில் இதய நோயால் பாதிக்கப்பட்ட பூமிகா திடீரென உயிரிழந்தார்.
பூமிகாவிடமிருந்து எந்த தொடர்பும் இல்லை என தவித்து வந்த மணிகண்டன், துடிதுடித்து போனார்.
தொடர்ந்து பூமிகாவின் செல்போனுக்கு அழைப்பு விடுத்தும் எந்தவொரு பலனும் இல்லை, இதற்கிடையே ஒருநாள் பூமிகாவின் பாட்டி செல்போனை எடுத்து பேசினார்.
அவரிடம் பூமிகா குறித்து மணிகண்டன் கேட்டார். அப்போது அவர், இதய நோய் பாதிப்பு காரணமாக பூமிகா இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
இதை கேட்டவுடன், அதிர்ச்சியடைந்த மணிகண்டன் தானும் தற்கொலை செய்து கொள்ள முடிவெடுத்தார்.
இதன்படி விஷத்தை குடித்துவிட்டு தற்கொலை செய்து கொண்டார், இதுகுறித்து அவரது தந்தை சக்திவேல் கொடுத்த புகாரின்பேரில் ரிஷிவந்தியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.