அமெரிக்காவில் இந்திய வம்சாவளியினரை சுட்டுக்கொன்ற சிறுவர்கள்
அமெரிக்காவில், இந்திய வம்சாவளியினர் ஒருவரை சிறுவர்கள் இருவர் சுட்டுக்கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை முயற்சி
அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்திலுள்ள Augusta என்னுமிடத்திலுள்ள சமீபத்தில் கடை ஒன்றில் வேலைக்குச் சேர்ந்துள்ளார் மன்தீப் சிங் (36).
கடந்த புதன்கிழமை, அவர் வேலை செய்த கடைக்குள் இரண்டு 15 வயது சிறுவர்கள் நுழைந்திருக்கிறார்கள். சிறிது நேரத்தில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டுள்ளது. அங்கு சென்று பார்த்தால் சிங் உயிரிழந்துகிடந்திருக்கிறார்.
அந்த சிறுவர்கள் கொள்ளையடிக்க முயன்றபோது சிங் தடுத்திருக்கலாம் என்றும், அதனால் அவர்கள் அவரை துப்பாக்கியால் சுட்டிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.
முகத்தை மறைக்காமல் தைரியமாக வெளியேறிய சிறுவர்கள்
சிங்கை சுட்டுக் கொன்ற சிறுவர்கள் மாஸ்க் எதுவும் அணிந்து முகத்தை மறைக்காமல் தைரியமாக வெளியேறியுள்ளார்கள். ஆனால், அதுவே அவர்கள் விரைவாக கைது செய்யப்பட பொலிசாருக்கு உதவியுள்ளது.
பொலிசார் இந்த துயர சம்பவம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சிங் குடும்பத்தில், அவர் மட்டுமே வேலை பார்த்து அவரது மனைவியையும் தாயையும் கவனித்து வந்த நிலையில், தற்போது அவர் உயிரிழந்துள்ளதால், அந்தக் குடும்பம் அநாதரவாக விடப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |