இனி பொறுக்க முடியாது... தாலிபான்களுக்கு எதிராக துணிவுடன் வீதிக்கு வந்த காபூல் பெண்கள்
துப்பாக்கி முனையில் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய தாலிபான் தீவிரவாதிகளுக்கு எதிராக காபூல் பெண்கள் கூட்டம் ஒன்று வீதிக்கு வந்து எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
மொத்தம் நான்கு பெண்கள் இஸ்லாமிய உடையில், கைகளில் பதாகையுடன், எங்களுக்கு எங்கள் உரிமைகள் வேண்டும் என்ற முழக்கத்துடன் காபூல் தெருவில் போராடியுள்ளனர்.
மட்டுமின்றி, தாலிபான்களின் முகத்திற்கு நேரே தங்கள் பதாகைகளை நீட்டியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஆனால், அப்போது அங்கே காணப்பட்ட தாலிபான்கள், போராடிய பெண்களை தடுத்து நிறுத்தவில்லை என்றே கூறப்படுகிறது.
எங்கள் உரிமைகளை திருப்பிக்கொடுங்கள், பெண்கள் எங்களுக்கு சமூக பாதுகாப்பு வேண்டும், கல்வி கற்கும் உரிமை வேண்டும், அரசியலில் ஈடுபடும் உரிமை வேண்டும் எனவும் அந்த நான்கு பெண்கள் முழக்கமிட்டுள்ளனர்.
First reported women’s protest in Kabul following the takeover by the Taliban:
— Leah McElrath ?️? (@leahmcelrath) August 17, 2021
Four women holding handwritten paper signs stand surrounded by armed Taliban fighters
Indescribable courage:pic.twitter.com/1HtpQ4X2ip
மட்டுமின்றி, எந்த சக்தியாலும் பெண்களை புறக்கணித்து திணறடிக்க முடியாது எனவும். பல வருடங்களாக நாங்கள் ஈட்டிய சாதனைகள் அனைத்தும் சமரசம் செய்யப்படக்கூடாது என்றும் அது எங்கள் அடிப்படை உரிமை எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஆனால், பெண்கள் இனி அச்சப்பட தேவை இல்லை எனவும், கல்வி கற்கும் உரிமைகள் அனைத்தும் வழங்கப்படும் என தாலிபான் உறுதி அளித்திருந்தது. மட்டுமின்றி, தாலிபான் செய்தித் தொடர்பாளர் சுஹைல் ஷாஹீன் கூறுகையில்,
எங்கள் இஸ்லாமிய விதிகளின் அடிப்படையில், பெண்களின் உரிமைகள், கல்வி, வேலை மற்றும் பேச்சு சுதந்திரம் ஆகியவற்றிற்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
மேலும், அனைத்து மக்களும் சரிசமம் என்பது மட்டுமின்றி, சமூகத்தில் பாகுபாடு இருக்கக்கூடாது என்பதே எங்கள் கொள்கை எனவும் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், ஆப்கானிஸ்தானில் உள்ள முக்கிய பொறுப்புகளில் இருக்கும் பெண்களின் குடியிருப்புகளை தாலிபான்கள் அடையாளப்படுத்திவிட்டு சென்றதாகவும், தற்போது அவர்கள் மரண பீதியில் இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.