இந்திய மற்றும் ரஷ்ய தடுப்பூசிகளுக்கு பிரேசில் அங்கீகாரம்! 30 மில்லியன் டோஸ்களுக்கு ஒப்பந்தம்
இந்தியா மற்றும் ரஷ்யாவிலிருந்து 30 மில்லயன் கொரோனா தடுப்பூசி டோஸ்களை வாங்க பிரேசில் அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.
அமெரிக்காவை அடுத்து உலகிலேயே கொரோனா வைரஸால் அதிக இறப்பு எணிக்கைகளைக் கொண்ட நாடாக பிரேசில் இரண்டாவது இடத்தில் உள்ளது. அந்நாட்டில் இதுவரை 226,000க்கும் அதிகமான மக்கள் கொரோனாவால் இறந்துள்ளனர்.
பிரேசிலில் இப்போது வரை, பிரித்தானியாவின் அஸ்ட்ராஜெனெகா மற்றும் சீனாவின் கொரோனாவாக் ஆகிய தடுப்பூசிகளை வற்றுக்கு மட்டுமே நாட்டில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 30 மில்லியன் டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசிகளை வாங்க இந்தியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஒப்பந்தம் செய்துள்ளதாக பிரேசில் அரசு புதன்கிழமை அறிவித்துள்ளது.
அதில் 20 மில்லியன் இந்தியாவின் Covaxin தடுப்பூசியும், 10 மில்லியன் ரஸ்சியாவின் Sputnik V தடுப்பூசியும் வாங்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அவை இந்த பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்குள் இறக்குமதி செய்யப்படவுள்ளன.
இந்தியா கடந்த வாரமே 2 மில்லியன் டோஸ்களை பிரேசிலுக்கு மானிய விலையில் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.