உக்ரைன் பிரச்சனைக்கான தீர்வு எனக்கு தெரியும்...பிரேசில் ஜனாதிபதி அதிரடி!
வியாழனன்று உக்ரைனில் ஏற்பட்டுள்ள நெருக்கடிக்கு தீர்வு காண வந்துள்ளதாகவும், அந்த யோசனையை மோதலால் பாதிக்கப்பட்ட நாடான உக்ரைனின் ஜனாதிபதி ஜெலென்ஸ்கிக்கு அனுப்புவதாகவும் பிரேசில் ஜனாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிழக்கு உக்ரைனிய பகுதிகளில் தீவிரமடைந்து தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இருநாடுகளுக்கு இடையிலான இந்த ராணுவ மோதல்கள், பேச்சுவார்த்தை நடத்தப்படாத காரணத்தால் தீர்வு எட்டப்படாமல் முடிவில்லா நிலையை அடைந்துள்ளது.
இந்தநிலையில், இருநாடுகளுக்கு இடையிலான மோதலை எப்படி தீர்க்க வேண்டும் என்று எனக்கு தெரியும் என பிரேசில் ஜ்னாதிபதி ஜெய்ர் போல்சனாரோ தெரிவித்துள்ளார்.
மேலும் இதுத் தொடர்பாக அவர் கருத்தில் பிரச்சனை தொடர்பான எனது கருத்தை நான் கூறுவேன், அத்துடன் இந்த பிரச்சனைக்கான தீர்வு மற்றும் அதை எப்படி தீர்க்க முடியும் என்று எனக்குத் தெரியும். ஆனால் நான் யாரிடமும் சொல்ல மாட்டேன்" என்று போல்சனாரோ செய்தியாளர்களிடம் கூறினார்.
இந்த வழக்கிற்கான தீர்வு, 1982 இல் அர்ஜென்டினாவின் இங்கிலாந்துடன் போர் எப்படி முடிவடைந்தது என்பது போல இருக்கும். எனவும் தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: மொத்தம் 6 விக்கெட்...இந்தியாவின் வெற்றி கனவை தட்டிப் பறித்த ஒற்றை இங்கிலாந்து வீரர்: அசத்தல் வீடியோ!
பிரேசில் ஜனாதிபதி போல்சனாரோ மற்றும் ஜெலென்ஸ்கி இடையிலான தொலைபேசி பேச்சுவார்த்தை அடுத்த வாரம் திட்டமிடப்பட்டுள்ளது என்றும், ஆனால் அதற்கு முன்னதாக, போல்சனாரோ ரஷ்ய பிரதமர் விளாடிமிர் புடினுடன் பேசினார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.