இந்தியாவின் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க ஆர்வம் காட்டியுள்ள தென் அமெரிக்க நாடு
இந்தியாவின் ஆகாஷ் வான் பாதுகாப்பு அமைப்பை வாங்க தென் அமெரிக்க நாடொன்று ஆர்வமாக உள்ளது.
இந்தியாவின் பாதுகாப்பு ஏற்றுமதி கனவிற்கு பெரும் ஊக்கமாக, பிரேசில் நாடு இந்தியாவின் ஆகாஷ் (Akash) வான் பாதுகாப்பு அமைப்பை வாங்குவதில் தீவிர ஆர்வம் காட்டியுள்ளது.
இந்த ஆர்வம், பிரதமர் நரேந்திர மோடி ஜூலை 5 முதல் 8 வரை ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் 17வது பிரிக்ஸ் (BRICS) மாநாட்டில் பங்கேற்க பிரேசிலுக்கு பயணம் செய்யும் நேரத்தில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
பிரேசிலின் ஆர்வத்திற்கான முக்கியக் காரணம், மே மாதத்தில் நடந்த "ஆபரேஷன் சிந்தூர்" என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தாக்குதலின்போது பாகிஸ்தான், இந்தியாவின் பல நகரங்களை நோக்கி சீனா மற்றும் துருக்கியில் தயாரிக்கப்பட்ட ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்களை ஏவி தாக்கியது.
இந்த தாக்குதல்களை 100 சதவீதம் வெற்றிகரமாக தடுக்க இந்தியா பயன்படுத்திய முக்கிய ஆயுதம் தான் ஆகாஷ் வான் பாதுகாப்பது அமைப்பாகும். இது AI சார்ந்த ஆகாஷ்தீர் மற்றும் IACCS ஆகிய வளையங்களில் இணைக்கப்பட்டிருந்தது.
ஆகாஷ் என்பது ஒரு medium-range surface-to-air ஏவுகணை ஆகும். இது 25 கி.மீ தூரத்தில் உள்ள விமானங்கள் மற்றும் ட்ரோன்களை ஒட்டுமொத்தமாக அழிக்கக் கூடிய திறனுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
பிரேசில் தற்போது Scorpene வகை நீர்மூழ்கிக் கப்பல்களின் பராமரிப்பு, கரையோர கண்காணிப்பு அமைப்புகள், காருடா துப்பாக்கிகள் உள்ளிட்ட பல இந்திய ராணுவ தொழில்நுட்பங்களில் ஆர்வம் காட்டியுள்ளது.
இந்த சந்திப்பின் மூலம் இந்தியா-பிரேசில் பாதுகாப்பு கூட்டாண்மை புதிய உச்சங்களை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |