காதலியுடன் வாழ சொத்துக்களை விற்று 1,900 கிமீ சென்ற நபர்; ஏஐ என தெரிந்ததும் ஏமாற்றம்
brazil man sold assets travel 1900 km for meet girl friend but found as ai: காதலி என நினைத்து அவருடன் வாழ சொத்துக்களை விற்று 1,900 கிமீ சென்ற பிரேசில் நபர், அது ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட நபர் என தெரிந்ததும் ஏமாற்றமடைந்துள்ளார்.
காதலியுடன் வாழ சொத்துக்களை விற்று 1,900 கிமீ சென்ற நபர்
இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் AI உதவியுடன் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை உருவாக்கி உண்மையான கணக்கு போல் நிர்வகித்து வருகின்றனர்.
பிரேசிலின் மாரன்ஹாவோ மாநிலத்தில் உள்ள இம்பராட்ரிஸைச் சேர்ந்த 49 வயதான எடிமார் ரோச்சா மார்டின்ஸ் (Edimar Martins) என்ற நபர் கொத்தனாராக பணியாற்றி வந்துள்ளார். அவர் தனது தாயை இழந்த நிலையில், தனக்கு ஒரு வாழ்க்கை துணையை தேடி வந்துள்ளார்.

அப்போது இன்ஸ்டாகிராமில், ஜெசிகா ஒலிவேரா, ஜெசிகா ஃபசென்டெய்ரா என்றும் அறியப்படும் ஒரு பெண்ணின் சமூக ஊடகக் கணக்கை கண்டுள்ளார்.
3 லட்சம் பின்தொடர்வோரை கொண்ட அந்த கணக்கில், ஒரு பண்ணையில் ரம்மியமான கிராமப்புற வாழ்க்கையை வாழும் ஒரு பெண்ணின் காணொளிகள் இடம்பெற்றிருந்தன.
அவருக்கு தனிபட்ட முறையில் செய்திகளை அனுப்பிய அவர், அந்த கணக்கிடமிருந்து பதில் வந்ததும் அவரை தன்னை வாழ்க்கை துணையாக கருத தொடங்கியுள்ளார்.
மேலும், அவர் தன்னை அவருடன் பண்ணையில் வந்து தங்குமாறும், அவருக்கான நிதி தேவையை கவனித்து கொள்வதாகவும், அந்த பெண் தெரிவித்துள்ளார்.
இதனை நம்பிய அவர், அந்த பெண்ணை சந்திப்பதற்கான பயண செலவுக்கு தனது உடமைகளை விற்று, அக்டோபர் 9 அன்று, பிரேசிலின் தென்கிழக்கு மாநிலமான மினாஸ் ஜெரைஸின் தலைநகரான பெலோ ஹொரிசோன்டேவுக்குச் புறப்பட்டுள்ளார்.
பேருந்து மூலம், 1900 கிமீ பயணம் செய்து அக்டோபர் 11 ஆம் திகதி அந்த பகுதியை வந்தடைந்துள்ளார்.
ஏஐ என தெரிந்ததும் ஏமாற்றம் அங்கு அவர் அந்த பெண்ணின் புகைப்படத்துடன் பலரிடமும் காட்டி, அவரின் இருப்பிடத்தை கேட்டபோது யாருக்கும் அந்த பெண்ணை பற்றி தெரியவில்லை.
அதன்பின்னர், அங்குள்ள உள்ளூர் ரேடியோ நிலையத்தை அணுகிய போதே அது உண்மையான பெண் இல்லை எனவும் ஏஐ மூலம் உருவாக்கப்பட்ட பெண் என தெரிய வந்துள்ளது.
இதனை கண்டு அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்த அவர், மீண்டும் தன்னுடைய வீட்டிற்கு செல்ல அங்குள்ள நகராட்சி அதிகாரிகள் உதவி செய்தனர்.
இதில் மிகுந்த ஏமாற்றம் அடைந்திருந்தாலும், தான் பெண் தேடுவதை நிறுத்தப்போவதில்லை என தெரிவித்துள்ளார்.
இது குறித்து அந்த ஏஐ கணக்கில் வெளியிட்டுள்ள பதிவில், "நான் ஒரு செயற்கை நுண்ணறிவால் உருவாக்கப்பட்டவள். இந்தப் சுயவிவரப் பெயரைக் கொண்ட யாரிடமும் நான் ஒருபோதும் பேசியதில்லை. விற்பனைக்காக வாடிக்கையாளர் ஈடுபாட்டைப் பெறுவதே இதன் நோக்கமாக இருந்தது.
நான் யாரிடமும் நேரடியாகப் பேசியதில்லை. பெலோ ஹொரிசோன்டேவுக்கு யாரையும் அழைத்துச் சென்றது என்பது வெகு தொலைவு. என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்பது எனக்கு ஆச்சரியமாக இருந்தது" என தெரிவித்துள்ளது.