6 மாதங்களில் விவாகரத்து., நண்பர்களுக்கு டிவோர்ஸ் பார்ட்டி வைத்து கொண்டாடிய மொடல் அழகி!
கணவரை விவாகரத்து செய்த பிறகு டைவோர்ஸ் பார்ட்டிக்காக ரூ.16 லட்சம் செலவு செய்ததாக பிரேசில் நாட்டைச் சேர்ந்த மொடல் அழகி வெளிப்படுத்தியுள்ளார்.
ஆனால், அவர் விவாகரத்து செய்ததற்கான காரணத்தை தெரிந்துகொண்டால் விசித்திரமாக தோன்றும்.
திருமணமான தம்பதிகள் ஏதோ ஒரு காரணத்திற்காக பிரிந்து விவாகரத்து செய்வதை சமீபகாலமாக அதிகம் கேள்விப்பட்டு வருகிறோம். மேலும், விவாகரத்து என்பது இன்றைய காலக்கட்டத்தில் சர்வ சாதாரணமாகிவிட்டது. ஆனால் இது சிக்கல்களை ஏற்படுத்துகிறது. உங்கள் வாழ்நாள் முழுவதையும் நீங்கள் செலவிட விரும்பும் ஒருவருடன் நீங்கள் பிரிவை எதிர்கொண்டால் அது நிச்சயமாக வலிக்கும்.
ஆனால் விவாகரத்துக்குப் பிறகு மகிழ்ச்சியாக இருக்கும் சிலர் உலகில் இருக்கிறார்கள். பிரேசிலிலும் அப்படி ஒரு பெண் இருக்கிறார். விவாகரத்துக்குப் பிறகு அந்தப் பெண் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறாள். தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி லட்சக்கணக்கில் செலவு செய்து தன் தோழிகளுக்கு விருந்து கொடுத்துள்ளார்.
இந்த பெண்ணின் பெயர் லாரிசா சாம்பானி (Larissa Sumpani). தொழில் ரீதியாக மொடல் அழகி. சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவ். அவர் அடிக்கடி இன்ஸ்டாகிராமில் பல்வேறு புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் தனது வாழ்க்கையைப் பற்றிய விவரங்களையும் பகிர்ந்து கொள்கிறார். சமீபத்தில் அவர் தனது சில புகைப்படங்களை பகிர்ந்து கொண்டு விவாகரத்து செய்து கொண்டதாக கூறினார்.
திருமணமான 6 மாதங்களில் விவாகரத்து
டெய்லி ஸ்டார் அறிக்கையின்படி, லாரிசா திருமணமாகி 6 மாதங்கள் மட்டுமே ஆகிறது. இப்போது அவர் தனது கணவரை விவாகரத்து செய்தார். அவர்கள் கடந்த மூன்று ஆண்டுகளாக ஒன்றாக இருக்கிறார்கள்.
விவாகரத்து குறித்து லாரிசா மிகவும் மகிழ்ச்சியாக இருப்பதுதான் ஆச்சரியமான விடயம். அவர் டிவோர்ஸ் பார்ட்டியை நடத்த முடிவெடுத்தார். தனது தோழிகளை அழைத்தார். இந்த விவாகரத்து விருந்தில் அனைவரும் ஒன்றாக மிகவும் வேடிக்கையாக இருந்தனர்.
பிறந்தநாள் விழாவில் கேக் வெட்டியது போல், லாரிசாவும் தனது விவாகரத்து கேக்கை வெட்டி அதில் 'புதிதாக விவகாரத்தானவள்' என்று எழுதி வைத்துள்ளார். இந்த பார்ட்டிக்காக லாரிசா சுமார் ரூ.16 லட்சம் (இலங்கை பணமதிப்பில்) செலவு செய்ததாக தெரிகிறது.
விசித்திரமான காரணங்களுக்காக விவாகரத்து
24 வயதான லாரிசா விவாகரத்துக்கான காரணத்தையும் கூறியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனக்கு ஆண்கள் மற்றும் பெண்கள் இருபாலினத்தின்மீதும் (bisexual) ஈர்ப்பு இருப்பதாகவும், ஆனால் அவரது கணவன் தன்னைத் தவிர வேறு யாருடனும் உறவாட சம்மதிப்பதில்லை என்கிறார். இந்த காரணத்திற்காக லாரிசா தனது கணவரை விவாகரத்து செய்தார். இப்போது அவள் சுதந்திரமாக வாழ்கிறார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |
Miss BumBum champion Larissa Sumpani, Larissa Sumpani divorce party, divorce in six months, Brazil Model Larissa Sumpani, Bisexual