நீக்கப்பட்ட X தளம் மீதான தடை! பிரேசில் உச்சநீதிமன்றம் உத்தரவு
எலான் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X-யின் சேவையை மீண்டும் தொடங்க பிரேசில் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தடை செய்யப்பட்ட X
எலான் மஸ்க்கின் பிரபலமான சமூக ஊடக தளமான X (முன்னாள் ட்விட்டர்) கருத்து கட்டுப்பாடு மற்றும் சட்டரீதியான பிரதிநிதித்துவம் தொடர்பான நீதிமன்ற உத்தரவுகளை பின்பற்றாததை அடுத்து, கடந்த ஆகஸ்ட் மாதம் முதல X தளம் இடைநீக்கம் செய்யப்பட்டது.
21 மில்லியனுக்கும் அதிகமான பயனாளர்களுடன், X க்கு ஒரு குறிப்பிடத்தக்க சந்தையை பிரேசில் பிரதிநிதித்துவம் கொண்டிருந்த போதிலும் X தளம் இணக்கமற்றதற்காக பல அபராதங்களை எதிர்கொண்டது.
இதையடுத்து தடையை நீக்கும் முயற்சியில் இறங்கிய X தளம், நீதிமன்றம் விதித்த அபார தொகையை 28,600,000 reais [$5.24 மில்லியன்] குறிப்பிடப்பட்ட வங்கி கணக்கில் செலுத்தாமல், தவறுதலாக வேறு வங்கி கணக்கில் செலுத்தியதை அடுத்து கடந்த வார விசாரணையின் போது பிரேசிலின் உச்சநீதிமன்றம் X தளம் மீதான இடைநீக்கத்தை நீக்க மறுத்துவிட்டது.
நீக்கப்பட்ட தடை
பிரபலமான சமூக ஊடக தளமான X, பிரேசிலின் உச்ச நீதிமன்றத்தால் தடை விதிக்கப்பட்டு இருந்த நிலையில், தற்போது அந்த தடை நீக்கப்பட்டுள்ளது.
தளத்தின் பில்லியனர் உரிமையாளர் எலான் மஸ்க் மற்றும் நீதிமன்றத்திற்கு இடையிலான மாதக்கணக்கான சட்டரீதியான சண்டைக்குப் பிறகு இந்த முடிவு வந்துள்ளது.
நீதிபதி அலெக்ஸாண்ட்ரே டி மோரஸ், X தளம் பிரேசிலில் மீண்டும் செயல்படத் தேவையான அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்துள்ளதாக அறிவித்தார்.
மேலும் நீதிபதியின் தீர்ப்பில், பிரேசிலின் தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தும் அமைப்பான அனடெல், 24 மணி நேரத்திற்குள் எக்ஸின் அணுகலை மீட்டெடுக்க செயல்பட வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளது.
இருப்பினும் செவ்வாய்க்கிழமை மாலை நிலவரப்படி, பிரேசிலில் உள்ள பயனாளர்கள் இன்னும் தளத்தை அணுக முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் |