மனைவி மற்றும் நாயுடன் உயிரிழந்து கிடந்த பிரேசிலின் பில்லியனர்: கொலை வழிமுறை ஆராயும் பொலிஸார்
பிரேசில் நாட்டு பணக்காரர்களில் ஒருவரான ஜோஸ் பெசெரா தன்னுடைய சொகுசு வீட்டில் மனைவி மற்றும் செல்லப்பிராணி நாயுடன் விஷவாயு தாக்கி உயிரிழந்து கிடந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மர்மமாக இறந்து கிடந்த பணக்காரர்
போர்ப்ஸின் பணக்காரர் பட்டியலில் இடம் பெற்று இருந்த பிரேசிலின் பில்லியனர் பணக்காரரான ஜோஸ் பெசெரா டி மெனெஸ் நெட்டோ(Jose Bezerra de Menezes Neto, 64) தன்னுடைய கடற்கரை சொகுசு வீட்டில் சனிக்கிழமை இறந்து கிடந்தார்.
அவருடன் அவரது மனைவி லூசியானா(Luciana , 62) மற்றும் அவர்களது செல்லப்பிராணி நாயும் உயிரிழந்து காணப்பட்டனர். பொலிஸாரின் முதற்கட்ட விசாரணையில் அவர்களது அறையில் வாயு கசிவு ஏற்பட்ட போது கார்பன் மோனாக்சைடு விஷம் பரவியதால் உயிரிழந்து இருக்கலாம் என குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன் இந்த வாயு கசிவானது சொகுசு வீட்டில் உள்ள மற்ற அறைகளில் சூடுபடுத்த பயன்படுத்தப்படும் உபகரணங்களால் ஏற்படுத்தப்பட்டு கார்பன் மோனாக்சைடு விஷத்தால் கோடீஸ்வர தம்பதி கொல்லப்பட்டு இருக்கலாம் என்றும் பாலோ சிவில் பொலிஸார் நம்புகின்றனர்.
ஜோஸ் பெசெரா உயிரிழந்து கிடந்ததை அவரது மகன் ரோட்ரிகோ பாஸ்சோஸ்(Rodrigo Passos) முதன் முதலில் கண்டறிந்து பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
ஜோஸ் பெசெரா உயிரிழந்த தருணத்தில் மற்ற உறவினர்களுடன் அவர் அதே வீட்டில் வேறு அறையில் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜோஸ் பெசெரா பிரேசிலின் பணக்காரர் பட்டியலில் 205 வது இடத்தில் உள்ளார். இவர் 249 மில்லியன் பவுண்டுகளுக்கு சமமான 1.55 பில்லியன் BRL-ஐ வைத்துள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |