கன்னித்தன்மை மீட்டெடுக்கும் அறுவை சிகிச்சை! $19,000 செலவு செய்ய தயாராகும் பிரேசில் மாடல் அழகி!
பிரேசிலிய இன்ஃப்ளுவென்சரான ரவேனா ஹன்னிலி என்ற பெண்மணி தன்னுடைய கன்னித்தன்மை மீட்டெடுக்கும் அறுவை சிகிச்சை முயற்சிக்கு தயாராகி வருகிறார்.
சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சை
பிரேசிலிய இன்ஃப்ளுவென்சர் ரவேனா ஹன்னிலி(Ravena Hanniely), ஹைமனோபிளாஸ்டி(hymenoplasty) எனப்படும் சர்ச்சைக்குரிய அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார்.
அதாவது பெண்களின் கன்னித்திரை(hymen) எனப்படும் ஹைமனை மீட்டெடுக்கும் ஒரு அறுவை சிகிச்சை இதுவாகும்.
இந்த அறுவை சிகிச்சைக்கு, அவர் $19,000 க்கும் அதிகமாக செலவிட திட்டமிட்டுள்ளார்.
266,000 க்கும் அதிகமான இன்ஸ்டாகிராம் பின்தொடர்பவர்களைக் கொண்ட 23 வயதான இளம்பெண், இந்த அறுவை சிகிச்சையை தனது சுயமரியாதையை அதிகரித்து, தனது வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்தை தொடங்க வழிவகுக்கும் என நம்புவதாக தெரிவித்துள்ளார்.
மருத்துவர்கள் எச்சரிக்கை
ஹன்னிலியின் இந்த அறுவை சிகிச்சை தனது கன்னித்தன்மையை மீட்டெடுக்க உதவும் என்று நம்புகிறார்.
இருப்பினும், மருத்துவ நிபுணர்கள் இந்த அறுவை சிகிச்சையை எச்சரிக்கை செய்கின்றனர்.
இதில் உடல் ரீதியான ஆபத்துகள் மற்றும் நெறிமுறை சவால்கள் உள்ளன என்று அவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |