கந்தல் பொம்மையை திருமணம் செய்த பெண்ணுக்கு குழந்தை..!
வீட்டில் தயாரிக்கப்பட்ட கந்தல் பொம்மையை திருமணம் செய்து 37 வயதான பிரேசிலிய பெண்ணுக்கு, இப்போது ஒரு குழந்தையும் உள்ளது என்றால் நம்புவீர்களா.. (புகைப்படங்கள் உள்ளே)
காதல் என்பது மிக அழகான உணர்வு. பிரேசிலில் உள்ள 37 வயது பெண்ணுக்கு இந்த சொற்றொடர் உண்மையாக உள்ளது. ஏனெனில், அவர் வீட்டில் தயாரிக்கப்பட்ட கந்தல் பொம்மையை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இப்போது, இந்த விசித்திர ஜோடிக்கு ஒரு குழந்தையும் உள்ளது (அதுவும் ஒரு பொம்மை).
மெய்ரிவோன் ரோச்சா மோரேஸ் (Meirivone Rocha Moraes) என்ற அந்த பெண்ணுக்கு, மார்செலோ (Marcelo) என்ற பொம்மையை அவரது தாயார் அறிமுகப்படுத்தினார். அந்தப் பெண்ணுக்கு நடனக் கூட்டாளி இல்லை என்பதை அறிந்து அவர் அதை உருவாக்கி கொடுத்துள்ளார்.
மார்செலோ மோரேஸின் வாழ்க்கையில் வந்ததும், தனது வாழக்கை முழுமையடைந்ததாக்க உணர்ந்துள்ளார். மார்செலோ ஒரு நடன கூட்டாளி என்பதை விட பெரிதாக நினைத்தார்.
எந்த அளவிற்கு என்றால், மார்செலோ ஒரு பொம்மை என்பதை மறந்து தனது வாழ்க்கைத்துணையாகவே நினைத்து, காதலித்து திருமணம் செய்து கொண்டார் மோரேஸ்.
பொம்மை வாதிடவோ சண்டையிடவோ மாட்டாது, எப்போதும் தன்னை புரிந்துகொள்வதால், தன்னை எப்போதும் விரும்பும் மனிதன் அவன்தான் என்று மோரேஸ் கூறுகிறார். "மார்செலோ ஒரு சிறந்த மற்றும் உண்மையுள்ள கணவர். எல்லா பெண்களும் பொறாமைப்படும் அளவுக்கு அவர் ஒரு மனிதர்” என்று அவர் கூறுகிறார்.
அதுமட்டுமின்றி, திருமணம் முடித்து "எனது கணவர் மார்செலோவுடன் திருமண இரவுக்குச் சென்றோம், நாங்கள் எங்கள் திருமண இரவை மிகவும் ரசித்தோம்" என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது, இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை பொம்மை உள்ளது, அது இந்த குடும்பத்தில் ஒரு புதிய உறுப்பினராக இணைந்துள்ளது.
இதையும் படிங்க: கடலில் மூழ்கிய ஹொங்ஹொங்கின் சின்னமான மிதக்கும் உணவகம்










இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.