போட்டியின்போது மயங்கி நீரில் மூழ்கிய நீச்சல் வீராங்கனை., சற்றும் யோசிக்காமல் பயிற்சியாளர் எடுத்த முடிவு!
அமெரிக்க நீச்சல் வீராங்கனை தண்ணீரில் மயங்கிய நிலையில், அவரது பயிற்சியாளரே உடனடியாக நீச்சல் குளத்தில் குதித்து அவரது உயிரைக் காப்பாற்றினார்.
ஹங்கேரி, புடாபெஸ்டில் நடைபெற்று வரும் 19-வது FINA உலக சாம்பியன்ஷிப் போட்டியில், நீச்சல் வீராங்கனையான அனிதா அல்வாரெஸ் (Anita Alvarez) தண்ணீரில் மயங்கி விழுந்து மூழ்கிய நிலையில், அவரது பயிற்சியாளரால் காப்பாற்றப்பட்டார்.
25 வயதான ஒத்திசைக்கப்பட்ட (synchronised) நீச்சல் வீரர் அனிதா அல்வாரெஸ் பெண்களுக்கான தனிப் போட்டியின் இறுதிப் போட்டியில் பங்கேற்ற பொது இச்சம்பவம் நடந்தது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் இந்திய தொழிலாளி கிரேனில் நசுங்கி மரணம்
போட்டியின்போதே அவர் திடீரென மயக்கமடைந்து குளத்தின் அடிப்பகுதியில் விழுந்தார். அதிர்ஷ்டவசமாக, அவரது பயிற்சியாளர் ஆண்ட்ரியா ஃபுயென்டெஸ் (Andrea Fuentes), உடனடியாக அவரைப் பார்த்து குளத்தில் குதித்து அனிதாவை மேலே இழுத்துவந்தார்.
பின்னர் உடனடியாக மருத்துவக் குழுவினர் வந்ததையடுத்து அனிதா சுயநினைவு திரும்பினார், அவருக்கு முதலுதவி அளிக்கப்பட்டது. தற்போது அவர் நலமுடன் இருப்பதாக கூறப்படுகிறது.
முதல் முறை அல்ல!
அனிதா அல்வாரெஸ் போட்டியின் போது மயங்கி விழுந்தது இது முதல் முறை அல்ல. 2021-ல் பார்சிலோனாவில் நடந்த ஒலிம்பிக் தகுதிச் சுற்றில், அவர் இதேபோல் சுயநினைவை இழந்த நிலையில், அவர் காப்பாற்றப்பட்டார்.
அவர் மயக்கமடைந்ததற்கு எந்த காரணமும் இல்லை, ஆனால் ஒத்திசைக்கப்பட்ட நீச்சல் வீரர்கள் நீருக்கடியில் நீண்ட நேரம் தங்கள் மூச்சை கட்டுப்படுத்தி வைத்திருக்க வேண்டும். இதன் காரணமாக அவர் மயங்கியிருக்கலாம்.
யோசிக்காமல் குதித்த பயிற்சியாளர்
உயிர்காப்பாளர்கள் உடனடியாக அவரை கவனித்து உதவி செய்யாததால், தானே குளத்தில் குதிக்க வேண்டியிருந்தது என்று பயிற்சியாளர் ஃபியூன்டெஸ் சம்பவத்தைத் தொடர்ந்து கூறினார்.
அனிதாவை மேலே இழுத்து வந்தபோது அவர் மூச்சு விடவில்லை என்பதால் தான் மிகவும் பயந்ததாக அவர் கூறினார். ஆனால் இப்போது அவர் நன்றாக இருக்கிறார், சிறப்பாக செயல்படுகிறார் என்று அவர் கூறினார்.