ரஷ்யாவிடமிருந்து நினைத்ததைவிட அதிக எண்ணெயை இறக்குமதி செய்யும் இந்தியா, சீனா: அமெரிக்கா
இந்தியாவும், சீனாவும் முன்பு நம்பியதை விட அதிகமாக ரஷ்யாவிடமிருந்து எண்ணெய் வாங்குவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் பொருளாதார ஆலோசகர் சிசிலியா ரூஸ் (Cecilia Rouse) இது குறித்து கூறியதாவது: அமெரிக்க அரசு முன்பு நம்பியதை விட, இந்தியாவும், சீனாவும் ரஷ்ய எண்ணெயை அதிக அளவில் கொள்முதல் செய்திருக்கலாம்.
இந்த இரண்டு பெரிய நாடுகளும் ரஷ்ய எண்ணெயை வாங்குவது உலகளாவிய சந்தைகளில் விநியோக தடைகளை தளர்த்துவதாகவும், சமீபத்திய எண்ணெய் விலை சரிவை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறினார்.
வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியட் (WTI) கச்சா எண்ணெய் 5.6 சதவீதம் குறைந்து பீப்பாய் ஒன்று 103.31 அமெரிக்க டொலராகவும், ப்ரெண்ட் (Brent) கச்சா எண்ணெய் 5.2 சதவீதம் குறைந்து 108.62 அமெரிக்க டொலராகவும் இருக்கிறது.
சிங்கப்பூரில் இந்திய தொழிலாளி கிரேனில் நசுங்கி மரணம்
புதன்கிழமையன்று, ப்ளூம்பெர்க் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், பைடனின் பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சிலின் தலைவரான சிசிலியா ரூஸ் பேசுகையில், இப்போது, குறிப்பாக எண்ணெய் சந்தைகள் மிகவும் நிலையற்றவையாக உள்ளது என்று கூறினார்.
மேலும், "சீனாவும் இந்தியாவும் உண்மையில் ரஷ்ய எண்ணெயை நாங்கள் நம்புவதை விட அதிகமாக வாங்குகின்றன, இதனால் சந்தையில் அதிக சப்ளை உள்ளது என்று நான் கேள்விப்பட்டேன்" என்றார்.
உக்ரைன் போரைத் தொடர்ந்து ரஷ்யா மீது மேற்கு நாடுகள் தடை விதித்துள்ள நிலையில், விளாடிமிர் புடின் ரஷ்ய எண்ணெயை ஆசிய சந்தைகளுக்கு பெரும் தேவைக்கு மத்தியில் தள்ளுபடியில் விற்பனை செய்து வருகிறார்.
2022-ஆம் ஆண்டின் தொடக்கத்தில், ரஷ்ய கச்சா எண்ணெயில் மூன்றில் இரண்டு பங்கு ஐரோப்பாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது, இப்போது நாட்டின் எண்ணெயில் 50 சதவீதம் ஆசியாவிற்கு செல்கிறது என்று காஸ்ப்ரோம் நெஃப்ட் தலைமை நிர்வாக அதிகாரி அலெக்சாண்டர் டியுகோவ் கூறுகிறார்.
அமெரிக்காவில் ரயிலில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் மரணம், மற்றோருவர் காயம்
சீனா மற்றும் இந்தியா ஆகிய இரு நாடுகளுக்குக் கூடுதலான எண்ணெயின் பெரும்பகுதி சென்றுள்ளது என்று சந்தை ஆராய்ச்சி நிறுவனமான Kpler தரவை காட்டுகிறது.
சீனாவின் ரஷ்ய எண்ணெய் இறக்குமதிகள் முந்தைய மாதத்தை விட மே மாதத்தில் 28 சதவீதம் உயர்ந்தது.
ரஷ்ய எண்ணெயின் மற்ற பெரிய இறக்குமதியாளர் இந்தியா ஆகும். சமீபத்திய தரவுகளின்படி ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 760,000 பீப்பாய்களுக்கு மேல் கொண்டுவருகிறது.
மேலும், உக்ரைனுக்கு எதிரான மாஸ்கோவின் போரின் போது விலை கடுமையாக வீழ்ச்சியடைந்ததால், ரஷ்ய கச்சா எண்ணெயை பெரிய அளவில் வாங்குமாறு இந்திய அரசாங்கம் அரசுக்கு சொந்தமான எண்ணெய் நிறுவனங்களைக் கேட்டுள்ளது என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் (WSJ) செவ்வாயன்று தெரிவித்துள்ளது.