சிங்கப்பூரில் இந்திய தொழிலாளி கிரேனில் நசுங்கி மரணம்
சிங்கப்பூரில் உள்ள கட்டுமான தளத்தில் கிரேன் பாகங்களுக்கு இடையே நசுங்கி 32 வயதான இந்திய தொழிலாளி உயிரிழந்ததாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
புதன்கிழமை காலை 10:15 மணியளவில் 1 Mandai Quarry சாலையில் வேலை செய்யும் இடத்தில் இந்த விபத்து நடந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹ்வா யாங் இன்ஜினியரிங் (Hwa Yang Engineering) நிறுவனத்தில் பணிபுரியும் இந்தியத் தொழிலாளி (பெயர் குறிப்பிடப்படவில்லை), கிரேன் கடிகார திசையில் திரும்பியபோது, மொபைல் கிரேனின் சேஸுக்கு அடியில் இருந்த கருவிப்பெட்டியில் இருந்து இரண்டு இரும்பு விலங்குகளை (shackles) மீட்டுக்கொண்டிருந்த போது, கிரேனுக்கு அடியில் சிக்கி அவரது நெஞ்சுப்பகுதி நசுங்கியது.
அந்த நபர் Khoo Teck Puat மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் அவரது தீவிர காயங்களால் உயிரிழந்தார் என செய்தித் தொடர்பாளர் கூறினார்.
இது, இந்த ஆண்டில் சிங்கப்பூரில் இதுவரை நிகழ்ந்த 27-வது பணியிட மரணமாகும்.
Photo Source: Safety Watch – SG on Facebook
Channel News Asia-வின் அறிக்கையின்படி, 2021 முழுவதும் மொத்தம் 37 பணியிட மரணங்கள் நடந்துள்ளன. ஏப்ரல் மாதத்தில் மட்டும் 10 பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து, சிங்கப்பூர் பிரதம மந்திரி லீ சியென் லூங் (Lee Hsien Loong) கடந்த மாதம், பணியிட மரணங்கள் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதைச் சரி செய்ய அனைத்துத் தரப்பினரையும் அழைத்ததாகவும் கூறினார்.
நாட்டின் பொருளாதாரம் மீண்டும் திறக்கப்பட்டு, வேலை மற்றும் சமூக நடவடிக்கைகள் மீண்டும் தொடங்குவதால், பாதுகாப்பு தரநிலைகள் மற்றும் நடைமுறைகள் நழுவியது போல் தெரிகிறது என்றும், விபத்து விகிதங்கள் அதிகரித்து வருகின்றன என்றும் அவர் குறிப்பிட்டார்.
முன்னதாக ஜூன் 14 முதல், மோசமான பணியிட பாதுகாப்பு மற்றும் சுகாதார செயல்திறன் கொண்ட நிறுவனங்கள் கடுமையான அபராதங்களை எதிர்கொள்ளும் என்று அந்நாட்டின் மனிதவள அமைச்சகம் தெரிவித்திருந்தது.
Photo Source: Safety Watch – SG on Facebook