பிரசவத்தின் போது துண்டிக்கப்பட்ட குழந்தையின் உடல்: தாயின் கருப்பைக்குள்ளே தலை வைத்து தைத்த மருத்துவ ஊழியர்
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்ட சனா குமாரி (32) என்ற பெண்ணின் கருப்பையில் இருந்து குழந்தையின் தலை மட்டும் துண்டிக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்ட நிலையில், அதனை மீண்டும் பெண்ணின் கருப்பைக்கு உள்ளேயே வைத்த தைத்த மருத்துவ ஊழியரால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிந்து மாகாணத்தின் தார்பார்கர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற சுகாதார மையத்தில் பிரசவத்திற்காக சனா குமாரி(32) என்ற பெண் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அப்பொது சுகாதார மையத்தில் மகப்பேறு மருத்துவர் மற்றும் பெண் ஊழியர்கள் யாரும் இல்லாத காரணத்தால் அனுபவம் இல்லாத மருத்தவ ஊழியர் ஒருவர் அந்த பெண்ணிற்கு பிரசவம் பார்த்த நிலையில், குழந்தையின் தலைப்பகுதி மட்டும் துண்டாக வெளியே எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் துண்டாக்கப்பட்டு வெளியே எடுக்கப்பட்ட குழந்தையின் தலையை அந்த மருத்துவ ஊழியர் மீண்டும் பெண்ணின் கருப்பையிலேயே வைத்து தைத்தது இருப்பது அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதுத் குறித்து பாகிஸ்தானின் லியாகத் மருத்துவ மற்றும் சுகாதார அறிவியல் பல்கலைக்கழகத்தின் மகளிர் மருத்துவ பிரிவுக்கு தலைமை பேராசியரான ரஹீல் சிக்கந்தர் தெரிவித்துள்ள கருத்தில், தார்பார்கர் மாவட்டத்தில் மருத்துவர்கள் இல்லாமல் நடைபெற்றுள்ள இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணின் கருப்பையில் உள்ளே வைத்து தைக்கப்பட்ட குழந்தையின் தலை, ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட அறுவை சிகிச்சை மூலம் வெளியே எடுக்கப்பட்டு பெண் காப்பாற்றப் பட்டுவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இந்த சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இந்த சம்பவத்தை பற்றிய முழு விசாரணை நடத்தவும், சம்பந்தப்பட்ட நபரை கைது செய்வதற்கும் தனி விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டு இருப்பதாக சிந்து மருத்துவ சேவையின் டைரக்டர் ஜெனரல் டாக்டர். ஜுமன் பஹோடோ தெரிவித்துள்ளார்.
கூடுதல் செய்திகளுக்கு: ரஷ்யாவிற்குள் புகுந்து... எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தாக்கிய உக்ரைன்: பரபரப்பு வீடியோ காட்சிகள்
மேலும் சம்பந்தப்பட்ட பெண் பிரசவத்திற்காக ஸ்ட்ரெச்சரில் படுக்கவைக்கப்பட்டு இருந்தபோது வீடியோ எடுக்கப்பட்டதால் அந்த பெண் அதிர்ச்சி அடைந்தாக வெளியாகி வரும் தகவலையும் விசாரணைக் குழு விசாரிக்கும் எனத் தெரிவித்துள்ளார்.