ரஷ்யாவிற்குள் புகுந்து... எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை தாக்கிய உக்ரைன்: பரபரப்பு வீடியோ காட்சிகள்
உக்ரைன் நாட்டின் எல்லையில் அமைந்து இருக்கும் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை மீது உக்ரைனின் ட்ரோன் விமானம் ஒன்று வெடிக்குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கை கிட்டத்தட்ட 119வது நாளாக தொடரும் நிலையில், உக்ரைனின் கிழக்கு பகுதியை முழு சுகந்தர பகுதியாக உருவாக்கும் முயற்சியில் ரஷ்ய ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.
பெரும்பாலான கிழக்குப் பகுதி நகரங்களை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து இருக்கும் ரஷ்ய படைகள், தற்போதைய ராணுவ நடவடிக்கையில் மூலோபாய நகரான செவரோடோனெட்ஸ்க் (Severodonetsk)முழுவதுமாக கைப்பற்றும் நோக்கில் அங்குலம் அங்குலமாக முன்னேறி வருகின்றனர்.
A fire broke out at the Novoshakhtinsk refinery in #Rostov region, #Russia. It looks like explosives were dropped on the plant from a drone. pic.twitter.com/JOguzEtG54
— NEXTA (@nexta_tv) June 22, 2022
இருப்பினும் ரஷ்ய வீரர்களின் தாக்குதலை உக்ரைன் பாதுகாப்பு வீரர்கள் மேற்கத்திய ராணுவ ஆயுதங்களின் உதவிக் கொண்டு முடிந்தவரை எதிர்ப்பு தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில், உக்ரைனுடனான எல்லைக்கு அருகில் இருக்கும் ரஷ்யாவின் ரோஸ்டோவ் பகுதியின் நோவோஷாக்டின்ஸ்கில் உள்ள ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மீது உக்ரைனின் UAV கமிகேஸ் ட்ரோன் தாக்குதல் நடத்தியுள்ளது.
ரஷ்ய எண்ணெய் சுத்திகரிப்பு நிலைகளின் மேல் பறந்த அந்த உக்ரைனின் ராணுவ ட்ரோன் விமானம் வெடிக்குண்டுகளை ஆலையின் மீது வீசி மிகப் பெரிய தீவிபத்தை ஏற்படுத்தியுள்ளது.
Reportedly footage of a Ukrainian UAV kamikaze strike on a Russian oil refinery in Novoshakhtinsk, Rostov Oblast. https://t.co/SYsD7oQTwr pic.twitter.com/1MjamL30uV
— Rob Lee (@RALee85) June 22, 2022
இதனைத் தொடர்ந்து ஆலையில் ஏற்பட்டுள்ள தீவிபத்தை கட்டுப்படுத்தும் பணியில் தீயணைப்பு வீரர்கள் மற்றும் மீட்புக் குழுவினர் ஈடுபட்டுள்ளனர். மேலும் இந்த தாக்குதலில் ஏதேனும் உயிரிழப்புகள் ஏற்பட்டதா என்ற விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
கூடுதல் செய்திகளுக்கு: மூன்று நாடுகளை உலுக்கிய பயங்கர நிலநடுக்கம்: ஆப்கானிஸ்தானில் 225 பேர் வரை மரணம்
ரஷ்ய எல்லைக்குள் புகுந்து அதன் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையை சேதப்படுத்திய உக்ரைனின் ட்ரோன் தாக்குதல் தொடர்பான வீடியோ காட்சிகள் தற்போது இணையத்தில் வெளியாகியுள்ளது.
Footage of firefighters trying to put out the flames after the UAV strike on the oil refinery. 3/ pic.twitter.com/6ScU9Txt5D
— Rob Lee (@RALee85) June 22, 2022