அமெரிக்காவில் ரயிலில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் மரணம், மற்றோருவர் காயம்
அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோவில் ரயிலில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் ஒருவர் காயமடைந்தார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் புதன்கிழமை காலை முனி (Muni) ரயிலுக்குள் நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டார் மற்றும் மற்றொருவர் காயமடைந்தார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
முனி ஃபாரஸ்ட் ஹில் ஸ்டேஷனில் துப்பாக்கிச் சூடு பற்றிய தகவல் கிடைத்ததைத் தொடர்நது சம்பவ இடத்துக்கு சான் பிரான்சிஸ்கோ பொலிஸார் விரைந்தனர். ஆனால் ரயில் அங்கிருந்து புறப்பட்டு காஸ்ட்ரோ நிலையத்தை நோக்கிச் சென்றுகொண்டிருந்தது.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் இந்திய தொழிலாளி கிரேனில் நசுங்கி மரணம்
பின்னர், காஸ்ட்ரோ நிலையத்தில் பாதிக்கப்பட்ட இருவரையும் அதிகாரிகள் கண்டுபிடித்தனர். ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டது, மற்றவர் உயிருக்கு ஆபத்தான காயங்களுடன் சான் பிரான்சிஸ்கோ பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார் என்று பொலிஸ் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
துப்பாக்கிச் சூடு நடத்தியவர் காஸ்ட்ரோ நிலையத்தில் ரயிலில் இருந்து வெளியேறி தப்பியதாகவும், இன்னும் தலைமறைவாக இருப்பதாகவும் சான் பிரான்சிஸ்கோ காவல் துறை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: ஒரே இரவில் பெரும் கோடீஸ்வரர் ஆன நபர்! கர்ப்பிணி நாயால் நடந்த ஆச்சரியம்
துப்பாக்கிச் சூடு தற்செயலானதல்ல, துப்பாக்கிச் சூடு நடத்தியவர் என சந்தேகிக்கப்படும் நபரும், பாதிக்கப்பட்டவர்களில் ஒருவரும் துப்பாக்கிச் சூடு நடத்துவதற்கு முன்பு தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது.
அமெரிக்கா துப்பாக்கிகளால் சூழப்பட்டிருக்கும் வரை, துப்பாக்கிச் சூடு எங்கும், எந்த நேரத்திலும் நிகழலாம் என்பதற்கான மற்றொரு நினைவூட்டல் தான் இந்த சம்பவம் என்று மாநில செனட். ஸ்காட் வீனர் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.