இலங்கை அணிக்கு 176 ஓட்டங்கள் இலக்கு! தெறிக்கவிட்ட ஒற்றை வீரர்
இலங்கை அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே 175 ஓட்டங்கள் குவித்தது.
பிரையன் பென்னெட்
ஹராரேயில் இலங்கை மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நடந்து வருகிறது.
நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி ஜிம்பாப்வே அணியின் பிரையன் பென்னெட், மருமனி தொடக்க வீரர்களாக களமிறங்கினர்.
சமீராவின் மிரட்டலான பந்துவீச்சில் மருமனி 7 ஓட்டங்களில் வெளியேற, சியான் வில்லியம்ஸ் 14 ஓட்டங்கள் எடுத்த நிலையில் தீக்ஷணா பந்துவீச்சில் lbw ஆனார்.
சமீரா
மறுமுனையில் அதிரடியில் மிரட்டிய பிரையன் பென்னெட் அரைசதம் அடித்தார். அணித்தலைவர் சிக்கந்தர் ரஸா 28 (22) ஓட்டங்கள் குவித்த நிலையில் வெளியேறினார்.
அதன் பின்னர் ரியான் பர்ல் 17 ஓட்டங்களில் சமீரா ஓவரில் ஆட்டமிழந்தார். அணியின் ஸ்கோர் 162 ஓட்டங்களாக இருந்தபோது, பிரையன் பென்னெட் 57 பந்துகளில் 12 பவுண்டரிகளுடன் 81 ஓட்டங்கள் குவித்த நிலையில் போல்டானார்.
இதன்மூலம் ஜிம்பாப்வே அணி 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 175 ஓட்டங்கள் குவித்தது. துஷ்மந்தா சமீரா (Dushmantha Chameera) 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |