மணமேடையில் மணமகன் செய்த செயல்..உடனே திருமணத்தை நிறுத்திய மணப்பெண்
இந்திய மாநிலம் உத்தர பிரதேசத்தில் மணமகன் கையை பிடித்து இழுத்ததால் மணமகள் திருமணத்தை நிறுத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
திருமண நிச்சயம்
பிரோசாபாத் மாவட்டம் காயிர்கார் நகரத்தில் ஆதேஷ் என்பவருக்கும், மனோஜ் குமாரி என்ற இளம்பெண்ணுக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
அதனைத் தொடர்ந்து திருமண ஏற்பாடுகள் தடபுடலாக நடந்தது. திருமண ஊர்வலம் நேற்று முன்தினம் இரவு விருந்தினர் இல்லத்திற்கு வந்து சேர்ந்தது.
அதன் பின்னர் இரவு உணவு முடிந்து மணமக்கள் இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் நிகழ்ச்சிக்கு தயாராகினர்.
அவசரப்பட்ட மணமகன்
அப்போது மணமகன் சற்று முன்பே மணமேடைக்கு வந்துவிட, மணமகள் வர தாமதமானது. பொறுமையாக அவர் நடந்து வருவதைப் பார்த்த ஆதேஷ், உடேன வேகமாக சென்று மனோஜ் குமரியின் கையைப் பிடித்து இழுத்து வந்துள்ளார்.
இதனால் அவர் மேடையில் தவறி விழுந்தார். இது மணமகளுக்கு கோபத்தை ஏற்படுத்தவே திருமணம் வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மணமகள் கோபம்
இருவரது குடும்பத்தினரும் அவரை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அவரோ தனது முடிவில் உறுதியாக இருந்தார். இந்த விவகாரம் பொலிஸாருக்கு தெரிய வந்ததைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.
எனினும், மணமகள் பிடிவாதமாக இருந்ததால் ஊர்வலம் திரும்பி சென்று திருமணம் நிறுத்தப்பட்டது.