திறப்பு விழா நிகழ்ச்சியின் போதே இடிந்து விழுந்த பாலம்... வைரல் வீடியோ!
திறப்பு விழாவில் இடிந்து விழுந்த புதிய ஆற்றுப் பாலம்.
சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வரும் திறப்பு விழா காட்சிகள்.
காங்கோ ஜனநாயக குடியரசில் ஆற்றுப் பாலத்தின் திறப்பு விழா நிகழ்ச்சியின் போதே புதிதாக கட்டப்பட்ட பாலம் இடிந்து விழுந்தது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
காங்கோ ஜனநாயக குடியரசில் உள்ளூர் மக்கள் மழைக் காலத்தில் ஆற்றினை பாதுகாப்பாக கடப்பதற்காக கட்டப்பட்ட புதிய ஆற்றுப் பாலம், திறப்பு நிகழ்ச்சியின் போதே இடிந்து விழுந்து அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
இதுத் தொடர்பாக உள்ளூர் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ள தகவலில், பாலத்திற்கு முன்பு கட்டப்பட்டு இருந்த தற்காலிக அமைப்பு தொடர்ச்சியாக அடிக்கடி உடைந்து வந்தாக அறிக்கையில் தெரிவித்துள்ளது.
Bridge collapses while being commissioned in DR Congo. pic.twitter.com/hIzwKWBx9g
— Africa Facts Zone (@AfricaFactsZone) September 5, 2022
இந்தநிலையில் திறப்பு விழாவில் பாலம் இடிந்து விழும் காட்சிகள் சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருவதுடன் சம்பந்தப்பட்ட கட்டிட நிறுவனத்தை கடுமையாக குற்றம்சாட்டி வருகின்றனர்.
அந்த வீடியோவில் புதிதாக கட்டப்பட்ட பாலத்தில் அதிகாரிகள் நின்று கொண்டு இருப்பதும், முறைப்படி பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைப்பதற்காக காத்து இருப்பதும் இடம்பெற்றுள்ளது.
அப்போது அருகில் உள்ள பெண் அதிகாரி ஒருவர் சிவப்பு ரிப்பனை கட் செய்வதற்காக கத்தரிக்கோலை எடுத்து நீட்டிய போது பாலம் திடிரென இடிந்து விழுந்தது. நல்ல வேளையாக அதிகாரிகள் யாரும் தரையில் மோதாமல் தப்பிக்க, பாதுகாப்பு அதிகாரிகள் உடனடியாக அனைவரையும் மீட்டனர்.
கூடுதல் செய்திகளுக்கு: சார்ஜர் இல்லாமல் ஐபோன்கள் விற்பனை செய்ய தடை: முக்கிய நாடு எடுத்துள்ள அதிரடி முடிவு!
கடந்த வாரம் நடைபெற்ற இந்த சம்பவத்தின் போது பாலம் இரண்டாக உடைந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.