பரிதாபப்பட்டு வீட்டுக்கு அழைத்து வந்த தெரு நாய்: வெளிநாட்டில் பிரித்தானிய பெண்மணிக்கு ஏற்பட்ட கோர முடிவு
ஸ்பெயின் நாட்டில் விடுமுறையை கழித்து வந்த பிரித்தானிய பெண்மணி ஒருவர், பரிதாபப்பட்டு தெருவில் இருந்து கொண்டுசென்ற தெரு நாய் ஒன்றால் தாக்கப்பட்டு மரணமடைந்துள்ளார்.
தெருவில் இருந்து குடியிருப்புக்கு
ஸ்பெயின் நாட்டின் Macastre பகுதியில் தங்கி வந்துள்ளார் 67 வயதான Anne Shields. இவரே தெருவில் இருந்து தமது குடியிருப்புக்கு அழைத்து செல்லப்பட்ட pit bull நாய் ஒன்றால் கொடூரமாக தாக்கப்பட்டு பரிதாபமாக மரணமடைந்தவர்.
சம்பவத்தன்று திடீரென்று Anne Shields வாய்விட்டு அலறும் சத்தம் கேட்டுள்ளது. பீதியடைந்த அக்கம் பக்கத்தினர் உடனடியாக உரிய அதிகாரிகளுக்கும் பொலிசாருக்கும் தகவல் அளித்துள்ளனர்.
இந்த நிலையில் சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த மருத்துவ உதவுக்குழுவினருக்கு அந்த குடியிருப்புக்குள் நுழைய முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து பொலிசார், அந்த நாயை சுட்டுக்கொல்ல, அதன் பின்னரே மருத்துவ உதவிக்குழுவினர் குடியிருப்புக்குள் நுழைந்து படுகாயமடைந்த Anne Shields-ஐ மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
ஆனால் காயங்கள் காரணமாக, சிகிச்சை பலனின்றி Anne Shields அடுத்த நாள் மரணமடைந்துள்ளார். அவரது மகள் 43 வயதான சாரா தெரிவிக்கையில், மிருகங்கள் மீது அதீத அன்பு கொண்ட தமது தாயாரால், தெருவில் ஆதரவின்றி, பட்டினியால் அவதிப்படும் அந்த நாயை கைவிட மனம் அனுமதிக்கவில்லை.
நாயை பராமரிக்க வேண்டும்
அதனாலையே, அவர் அந்த நாயை வீட்டுக்கு அழைத்து வந்தார் என்றார். மட்டுமின்றி, விலங்குகளுக்கான காப்பகங்கள் அனைத்தும் நிரம்பியிருந்ததால், மாற்று ஏற்பாடு ஒன்று செய்து கொள்ளும் வரையில் அந்த நாயை பராமரிக்க வேண்டும் என்றே Anne Shields மகளிடம் கூறியுள்ளார்.
ஆனால், அந்த நாயை அவர் வளர்க்க வேண்டும் என பின்னர் கூறியதாகவும், அதுவே தற்போது தமது தாயாரின் மறைவுக்கு காரணமாக அமைந்தது எனவும் சாரா தெரிவித்துள்ளார்.
பிரித்தானியாவில் pit bull இன நாய்களை குடியிருப்புகளில் வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது, ஆனால் ஸ்பெயின் நாட்டில் அந்த தடை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் படிக்க ஆசிரியர் இல்லையே என்ற கவலை இனியும் வேண்டாம். uchchi.com இன் இணையவழிக் கற்கை நெறிகளில் இன்றே இணையுங்கள்.