துபாயில் 23 வயது பிரித்தானிய பெண்ணுக்கு ஆயுள் தண்டனை: வேதனையில் தாய் கூறிய விடயம்!
துபாயில் பிரித்தானிய பெண் ஒருவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பிரித்தானிய பெண்ணுக்கு சிறை தண்டனை
பிரித்தானியாவின் லிவர்பூல் பகுதியை சேர்ந்த 23 வயது மியா ஓ’பிரையன் என்ற இளம்பெண்ணுக்கு துபாயில் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
அவர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள வழக்குகள் மற்றும் குற்றச்சாட்டுகள் என்னவென்று இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
ஆனால் மியா ஓ’பிரையன் தாயார் டேனியல் மெக்கென்னா(46) வழங்கிய தகவலில், தவறான நண்பர்களின் பழக்கம் காரணமாக, பெரிய முட்டாள்தனமான தவறு செய்துவிட்டாள், அதற்கான தண்டனையை இப்போது அனுபவிக்கிறாள் என மிகவும் வருத்தத்துடன் தெரிவித்துள்ளார்.
மேலும் நீக்கப்பட்ட Gofundme என்ற நிதி திரட்டும் பக்கத்தில் மெக்கென்னா எழுதியிருந்த விவரத்தில், மியா ஓ’பிரையன் வெறும் 23 வயது இளம்பெண், அவர் தன்னுடைய வாழ்க்கையில் யாருக்கும் இதுவரை தீங்கு செய்தது இல்லை.
அத்துடன் அவர் பல்கலைக்கழகத்தில் சட்டம் படித்த இளம் பெண் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |