இலங்கைக்கு சுற்றுலா சென்ற இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
Tourist plunges 100ft to her death down waterfall in Sri Lanka: இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்த இளம்பெண்ணொருவர் நீர்வீழ்ச்சி ஒன்றில் சறுக்கி விழுந்ததில் பரிதாபமாக பலியானார்.
இலங்கைக்கு சுற்றுலா சென்றிருந்த இளம்பெண்ணொருவர், தன் நண்பர் ஒருவருடன் கித்தல் எல்ல என்னும் நீர்வீழ்ச்சிக்கு சென்றுள்ளார்.
இளம்பெண்ணுக்கு நேர்ந்த துயர முடிவு
நீர்வீழ்ச்சிக்குச் சென்றிருந்த அந்தப் பெண், எதிர்பாராதவிதமாக, சுமார் 100 அடி உயரத்திலிருந்து சறுக்கி விழுந்துள்ளார்.

உடனடியாக மருத்துவ உதவிக்குழுவினர் அவரை அருகிலிருந்த மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல, அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
யார் அந்த இளம்பெண்?
அவரது பெயர் வாலன்டினா (Valentina Stragliotto, 27). இத்தாலி நாட்டவரான வாலன்டினா, பல ஆண்டுகளாக பிரித்தானியாவில் வாழ்ந்துவந்துள்ளார்.

33 நாடுகளுக்குச் சென்றுள்ள வாலன்டினா, பிரெஞ்சு, இத்தாலி மொழி, ஆங்கிலம் மற்றும் ஸ்பானிஷ் மொழிகளில் சரளமாக பேசக்கூடியவர் ஆவார். இயற்கையை நேசிக்கும் வாலன்டினா, ஒரு ஒன்லைன் விளம்பர நிறுவனத்தில் பணியாற்றியதுடன், சுற்றுலா ஒருங்கிணைப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார்.
மகளுடைய மரணச் செய்தி கேட்டு அதிர்ச்சியடைந்துள்ள வாலன்டினாவின் பெற்றோர், தங்களால் எதுவும் கூற இயலாத அளவுக்கு தாங்கள் துயரத்திலிருப்பதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இளம் வயதில் துயர முடிவை சந்தித்த வாலன்டினாவுக்கு அவரது சொந்த ஊர் மக்கள் மற்றும் சகப் பணியாளர்களிடமிருந்து இரங்கல்கள் குவிகின்றன.