புலம்பெயர்ந்தவர்களை தடுக்கும் பிரித்தானியா-பிரான்ஸ் இடையிலான ஒப்பந்தம் நிறைவேற்றம்: புதிய அம்சங்கள் என்னென்ன?
பிரான்ஸில் இருந்து ஆபத்தான முறையில் ஆங்கில கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க 63 மில்லியன் பவுண்ட் மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்திற்கு பிரித்தானியா சம்மதித்துள்ளது.
புலம்பெயர்ந்தவர்களின் ஆபத்தான பயணம்
பிரான்ஸில் இருந்து ஆயிரக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் தொழில் மற்றும் புதிய வாழ்க்கைகாக சட்டவிரோதமான முறையில் சிறிய படகுகள் மூலம் பிரித்தானியாவை வந்தடைவதற்காக ஆங்கில கால்வாயை அபத்தான நிலையில் கடக்கின்றனர்.
இவ்வாறு கடப்பதில் பல முறை படகுகள் கவிழ்ந்து கோர விபத்துகள் ஏற்படுவதுடன், நூற்றுக்கணக்கான புலம்பெயர்ந்தவர்கள் உயிரிழக்கின்றனர்.
Getty Images
சிறிய படகுகள் மூலம் ஆங்கில கால்வாயை கடக்க முயற்சித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு 28,526 ஆக இருந்த நிலையில், நேற்றைய நிலவரப்படி இந்த ஆண்டு அதன் எண்ணிக்கை 40,000 ஆக உயர்ந்துள்ளது.
இதனை தடுத்து நிறுத்த 2018ம் ஆண்டு பிரித்தானிய அரசு பிரான்ஸுடன் 200 மில்லியன் யூரோ மதிப்பிலான (175 மில்லியன் பவுண்டு) ஒப்பந்தத்தை மேற்கொண்டது, இருப்பினும் அவை மோசமடைந்தது.
பிரான்ஸுடன் புதிய ஒப்பந்தம்
இந்த நிலையில் பிரான்ஸில் இருந்து ஆபத்தான முறையில் ஆங்கில கால்வாயை கடக்கும் புலம்பெயர்ந்தவர்களை தடுக்க 63 மில்லியன் பவுண்டு (72 மில்லியன் யூரோ) மதிப்புள்ள புதிய ஒப்பந்தத்தில் பிரித்தானியா திங்கட்கிழமை காலை கையொப்பம் இட்டுள்ளது.
PA
இதன்மூலம் 40 சதவிகிதம் கூடுதலான எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் பிரான்ஸ் கடற்கரையில் ரோந்து பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள்.
அத்துடன் முதல் முறையாக பிரித்தானிய எல்லை பாதுகாப்பு அதிகாரிகள் பிரான்ஸின் ஆங்கில சேனலின் மறுபக்கத்தில் உள்ள பிரான்ஸ் கட்டுப்பாட்டு அறையில் இருந்து ரோந்து நடவடிக்கைகளை கண்காணிப்பார்கள்.
பிரித்தானிய அரசு தகவல்
இந்த புதிய ஒப்பந்தத்தை தொடர்ந்து பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் வழங்கியுள்ள தகவலில், இந்த புதிய ஒப்பந்தம் சிறிய படகுகள் மூலம் ஆங்கில கால்வாயை கடக்கும் செய்யும் புலம்பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை “நிச்சயமாக” தடை செய்யும் என்றும் ஆனால் இந்த நடவடிக்கை சிறிது மாதங்கள் எடுக்கலாம் என தெரிவித்துள்ளார்.
PA
பிரித்தானியாவின் உள்துறை செயலாளர் சுயெல்லா பிராவர்மேன் இன்று காலை பிரான்ஸ் கூட்டாளி ஜெரால்ட் டார்மானினுடன் ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார்.