புலம்பெயர்ந்தவர்கள் படகு சிரியாவில் நீரில் மூழ்கி விபத்து: அதிகரிக்கும் உயிரிழப்பு எண்ணிக்கை
புலம் பெயர்ந்தவர்களின் படகு சிரியாவில் நீரில் மூழ்கி விபத்துக்குள்ளானதில் 86 பலி.
பொருளாதார நெருக்கடி காரணமாக நாட்டை விட்டு வெளியேறும் லெபனான் மக்கள்.
சிரியாவில் புலம்பெயர்ந்தவர்கள் சென்ற படகு நீரில் கவிழ்ந்ததில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 86 ஆக உயர்ந்துள்ளது.
லெபனானில் அதிகரித்து வரும் வறுமை மற்றும் பொருளாதார சூழ்நிலையால் பெரும்பாலான மக்கள் நாட்டை விட்டு வெளியேறி ஐரோப்பிய நாடுகளுக்கு செல்வதற்கான சட்டவிரோதமான ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர்.
sky news
அந்த வகையில் செவ்வாய்கிழமை லெபனானை விட்டு வெளியேறிய சட்டவிரோதமான கப்பல், சிரியாவில் நீரில் மூழ்கி பெரும் விபத்தில் சிக்கியுள்ளது.
செவ்வாய் கிழமை லெபனானில் இருந்து புறப்பட்ட கப்பல் நீரில் சிக்கி மூழ்கியதாக வியாழன் முதல் தகவல்கள் வெளிவரத் தொடங்கின.
சிரியாவின் சுகாதார அமைச்சர் முன்பு தெரிவித்துள்ள கருத்தில் குறைந்தது 77 பேர் இறந்ததாக தெரிவித்தார்.
ஆனால் சனிக்கிழமை சிரியா அரசு தொலைக்காட்சி வெளியிட்ட தகவலில் அறிக்கையில் இறப்பு எண்ணிக்கை 86 ஆக அதிகரித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
sky news
விபத்திற்குள்ளான படகில் சிரியா, லெபனான் மற்றும் பாலஸ்தீனியர்கள் ஆகியோர் பயணம் செய்ததாக தெரியவந்துள்ளது.
மேலும் படகில் எத்தனை பேர் பயணம் செய்தனர் என்பதற்கான துல்லிய தகவல்கள் வெளிவராத நிலையில், படகில் குறைந்தது 120 பேர் வரை பயணம் செய்து இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கூடுதல் செய்திகளுக்கு; ரஷ்ய குடியுரிமை பெற்ற உக்ரைனிய இளைஞர்களுக்கு அழைப்பாணை: ரஷ்ய படைகள் நடவடிக்கை
உயிர் பிழைத்தவர்கள் 12 சிரியர்கள், ஐந்து லெபனானியர்கள் மற்றும் மூன்று பாலஸ்தீனியர்கள் என்று லெபனானின் போக்குவரத்து அமைச்சர் கூறினார்.