ரஷ்ய குடியுரிமை பெற்ற உக்ரைனிய இளைஞர்களுக்கு அழைப்பாணை: ரஷ்ய படைகள் நடவடிக்கை
உக்ரைனிய இளைஞர்களுக்கு அழைப்பாணை வழங்கி ரஷ்ய படைகள்.
ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளில் ரஷ்ய குடியுரிமை வழங்கும் ரஷ்யா.
உக்ரைனில் ரஷ்ய குடியுரிமை பெற்ற கட்டாய வயதுடைய ஆண்களுக்கு, ஆக்கிரமிப்பாளர்கள் அழைப்பாணைகளை வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் நடவடிக்கையில், தலைநகர் கீவ்வை கைப்பற்றும் முயற்சியில் ரஷ்ய படைகள் பின்வாங்கியதை தொடர்ந்து, வடகிழக்கு பகுதிகளில் ரஷ்ய படைகள் கவனம் செலுத்தி ஆக்கிரமிக்க தொடங்கினர்.
The General Staff of the Armed Forces of #Ukraine reports that in the occupied territories of #Zaporizhzhia and #Kherson regions, the invaders hand out subpoenas to men of conscription age who received the #Russian citizenship. pic.twitter.com/LyI64hiEIi
— NEXTA (@nexta_tv) September 24, 2022
இவ்வாறு ஆக்கிரமித்து வைக்கப்பட்டு இருந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களுக்கு, ரஷ்ய படைகள் ரஷ்ய குடியுரிமைகளை வழங்கி அவர்களை ரஷ்யாவுடன் இணைக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், உக்ரைனின் வடகிழக்கு பகுதிகளான Zaporizhzhia மற்றும் kherson ஆகிய பகுதிகளின் ஆக்கிரமிக்கப்பட்ட பிரதேசங்களில் ரஷ்ய குடியுரிமை பெற்ற கட்டாய வயதுடைய ஆண்களுக்கு ஆக்கிரமிப்பாளர்கள் (subpoenas) அழைப்பாணைகளை வழங்கி வருகின்றனர்.
கூடுதல் செய்திகளுக்கு: ஆட்சி பொறுப்பேற்ற பிறகு…மன்னர் சார்லஸின் புதிய முதல் அதிகாரப்பூர்வ புகைப்படம் வெளியீடு!
இதனை உக்ரைனின் ஆயுதப்படை பொதுப்பணி பாதுகாப்பு பணியாளர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர்.