மாயமான பிரபல பிரித்தானிய நடிகர் சடலமாக மீட்பு
பிரபல பிரித்தானிய நடிகர் ஒருவர் அமெரிக்காவில் மாயமான நிலையில், அவரது உயிரற்ற உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிரபல நடிகர் மாயம்
ஜனவரி மாதம் அமெரிக்காவின் கலிபோர்னியாவில் மலையேற்றத்துக்குச் சென்றிருந்த பிரபல பிரித்தானிய நடிகரான Julian Sands (65) மாயமானார்.
ஆஸ்கார் விருது பெற்ற திரைப்படமான A Room With A View முதல் பல்வேறு திரைப்படங்கள் மற்றும் தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்து பிரபலமானவர் நடிகர் Julian Sands.
REUTERS
மோசமான வானிலை நிலவிய நிலையில், மலையேற்றத்துக்குச் சென்றிருந்த Julian Sands ஜனவரி மாதம் 13ஆம் திகதி San Gabriel Mountains என்னும் மலையில் மாயமானார்.
தேடுதல் வேட்டைக்குத் தடையாக இருந்த புயல்
மாயமான Julian Sandsஐத் தேடும் முயற்சி கடுமையான புயல் காரணமாக பாதிக்கப்பட்டது. மீட்புக்குழுவினர் ஹெலிகொப்டர் உதவியுடனும் மலையேற்ற வீரர்கள் உதவியுடனும் அவரைத் தேடிவந்த நிலையில், San Gabriel மலைப்பகுதியில் ஒருவருடைய உடல் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
GETTY IMAGES
தற்போது, அந்த உடல் பாகங்கள் Julian Sands உடையவைதான் என்பது உறுதிசெய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காணாமல் போன Julian Sands உயிரற்ற நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ள விடயம், அவரது குடும்பத்தார் மற்றும் நண்பர்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
SAN BERNARDINO COUNTY SHERIFF'S OFFICE
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP இல் இணையுங்கள். |