லண்டனில் இருந்து கிளம்பிய விமானத்தில் மோதிய பறவை: உயிர்தப்பிய 236 பேர்
லண்டனில் இருந்து புறப்பட்ட பிரிட்டிஷ் ஏர்வேஸ் பயணிகள் விமானம் மீது பறவை மோதியதால் ரத்து செய்யப்பட்டது.
500 அடி உயரத்தில்
பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் 224 பயணிகள், 12 ஊழியர்களுடன் லண்டனில் இருந்து சென்னை நோக்கி பயணித்தது.
சென்னை சர்வதேச விமானத்தில் தரையிறங்குவதற்கு சுமார் 500 அடி உயரத்தில் விமானம் இருந்தபோது, திடீரென விமானத்தின் முன் பகுதியில் பறவை ஒன்று மோதியது.
விமானத்தின் எஞ்சின் பகுதிக்குள் அந்த பறவை சிக்கிக் கொண்டது. இதனால் அதிர்ச்சியடைந்த விமானி சாமர்த்தியமாக விமானத்தை தரையிறக்கினார்.
உயிர்தப்பிய 236 பேர்
இதன் காரணமாக, விமானத்தில் இருந்த 236 பேரும் எந்தவித பாதிப்பும் இல்லாமல் நல்வாய்ப்பாக உயிர்தப்பினர்.
அதன் பின்னர் விமானத்தில் பறவை மோதியது குறித்து அறிந்த விமான பொறியாளர் குழுவினர், பாதுகாப்பு அதிகாரிகள் விமானத்தை ஆய்வு செய்தனர்.
அப்போது பறவை மோதியதில் விமானம் சேதமடைந்திருந்ததால் அதனை உடனடியாக மீண்டும் இயக்க முடியாத நிலை ஏற்பட்டது.
அதனைத் தொடர்ந்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல இருந்த பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் ரத்து செய்யப்பட்டது.

| உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |