காபூலில் ஐ.எஸ் வெறியாட்டம்... கடவுச்சீட்டுகளுடன் உதவி கேட்டு கெஞ்சிய பிரித்தானிய சிறார்கள்
ஆப்கானிஸ்தானில் காபூல் விமான நிலையத்தை குறிவைத்து ஐ.எஸ் தீவிரவாதிகள் முன்னெடுத்த தாக்குதலுக்கு சில மணி நேரம் முன்னர் கடவுச்சீட்டுகளுடன் பிரித்தானிய சிறார்கள் உதவி கேட்டு கெஞ்சிய சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
காபூல் விமான நிலையத்தை குறிவைத்து, ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு தற்கொலை வெடிகுண்டு தாக்குதலை முன்னெடுத்துள்ளது. இதில், 60 பேர்கள் உடல் சிதறி பலியானதாக முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த தாக்குதலில் அமெரிக்க ராணுவத்தினர் 13 பேர்கள் கொல்லப்பட்டதாகவும், தாலிபான்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும் தெரிய வந்துள்ளது. இந்த நிலையில், வெடிகுண்டு தாக்குதல் முன்னெடுக்கப்படுவதற்கு சில மணி நேரம் முன்னர், பிரித்தானிய சிறார்கள் கடவுச்சீட்டுகளுடன் உதவி கோரிய சம்பவம் வெளியாகியுள்ளது.
இந்த நரகத்தில் இருந்து வெளியேறி பிரித்தானியாவுக்கு செல்வதே தற்போதைய ஒரே நோக்கம் என குறிப்பிட்டுள்ளார் இரண்டு பிள்ளைகளின் தாயாரான சுல்தான் ஜாரி.
முன்னதாக, காபூல் நகரில் செயல்பட்டுவரும் ஐ.எஸ் அமைப்பினரால் தாக்குதல் முன்னெடுக்கப்படலாம் என அமெரிக்கா, பிரித்தானியா உள்ளிட்ட நாடுகள் தங்கள் மக்களுக்கு எச்சரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.