உணவுத்தட்டுப்பாடு காரணமாக அணில்களை உண்ணும் பிரித்தானியர்கள்: ரஷ்ய தொலைக்காட்சி வெளியிட்டுள்ள செய்தி
பிரித்தானியாவில் கடுமையான உணவுத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், அதனால் பிரித்தானியர்கள் பட்டினி கிடப்பதாகவும், வேறு வழியில்லாமல் அவர்கள் அணில்களை உண்ணுவதாகவும் ரஷ்ய தொலைக்காட்சி ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் வெளியான செய்தி
பிரித்தானியா பணத்தை எல்லாம் உக்ரைனுக்கு உதவுவதற்காக செலவு செய்வதால், பிரித்தானியர்களிடம் பணத்தட்டுப்பாடு நிலவுவதாகவும், ஆகவே, அவர்கள் வேறு வழியில்லாமல் அணில்களை பிடித்து உண்ணுவதாகவும் ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் செய்தி வெளியாகியுள்ளது.
இந்த அதிரவைக்கும் தகவலை, ரஷ்ய அரசுத் தொலைக்காட்சியில் '60 minutes' என்னும் நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கும் Olga Skabeyeva என்னும் பெண் வெளியிட்டுள்ளார்.
Image: Getty Images
உணகவங்களில் அணில் உணவு
பிரித்தானியாவில் உணவுத் தட்டுப்பாடு நிலவுவதால், பிரித்தானிய உணவகங்களில் அணில்கள் உணவாகப் பரிமாறப்படுவதாக தெரிவித்துள்ளார் Olga Skabeyeva.
உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதிலிருந்து பிரித்தானியா பின்வாங்கவில்லை என்று கூறியுள்ள அவர், ஆகவே, நாங்கள் அணில்களை உண்டாலும், உக்ரைனுக்கு ஆயுதங்கள் வழங்குவதை நிறுத்தமாட்டோம் என பிரித்தானியர்கள் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.
இந்த Olga Skabeyeva, புடினுடைய தீவிர ஆதரவாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
Image: Twitter