நடுக்கடலில் மூழ்கிய பிரித்தானியா கொடியிடப்பட்ட கப்பல்! பயணிகளின் நிலை என்ன? வெளியான தகவல்
கிரேக்க தீவான மிலோஸின் கடற்கரையில் பிரித்தானியா கொடியிடப்பட்ட கப்பல் மூழ்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வியாழக்கிழமை காலை கிரேக்க தீவான மிலோஸின் கடலில் கப்பல் ஒன்று மூழ்கிகொண்டிருப்பதாக துறைமுக அதிகாரிகளுக்கு தகவல் வந்துள்ளது.
கப்பலில் பிரித்தானியா கொடி இருந்ததாகவும், அதிலிருந்த 17 பேரும் கடலில் மூழ்கியதாக தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து பயணிகள் அனைவரையும் பத்திரமாக மீட்க உடனடியாக மீட்பு நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது.
மூன்று கடற்படைக் கப்பல்கள், இரண்டு கப்பல்கள், ஒரு தனியார் கப்பல், ஒரு கடற்படை ஹெலிகாப்டர் மற்றும் ஒரு விமானப்படை ஹெலிகாப்டர் ஆகியவை சம்பவயிடத்திற்குப் விரைந்து மீட்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளன.
இதனையடுத்து, கப்பலில் பயணித்த அனைவரும் பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக ஊடகங்கள் தகவல் தெரிவித்துள்ளன.
17 பயணிகளும் கிரேக்க நாட்டவர்கள் என்றும், அதில் மூன்று குழந்தைகளும் அடங்குவர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
படகு ஏன் அல்லது எப்படி மூழ்கியது என்பது தற்போது வரை தெரியவில்லை.