பிரபல பாடகி கொலை: பிரிட்டிஷ் எண்ணெய் முதலாளியின் பயங்கர செயல்!
பிரிட்டிஷ் எண்ணெய் முதலாளி குறுஞ்செய்தி தகராறில் தனது மனைவியை துருக்கியில் சுட்டுக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குறுஞ்செய்தி தகராறு
பிரிட்டிஷ் எண்ணெய் முதலாளி டேவிட் தாமஸ் பிளைத் (53) தனது மனைவி விக்டோரியா வேரா பிளைத்தை (40) துருக்கியின் அங்காராவில் உள்ள அவர்களது குடும்ப வீட்டில் சுட்டுக் கொன்றார் என்று நம்பப்படுகிறது.
ஆரம்ப தகவல்களின்படி, பிளைத் தனது மனைவியின் ஒரு குறுஞ்செய்தியால் கோபமடைந்ததாகவும்,அதையடுத்து துப்பாக்கி சூடு நடந்ததாகவும் கருதப்படுகிறது.
தம்பதியரின் மூன்று குழந்தைகள் (வயது 4, 10 மற்றும் 14) சம்பவத்தின் போது வீட்டில் இருந்தனர். தற்போது அவர்கள் அவர்களது தாயின் உறவினர்களின் பராமரிப்பில் காப்பகத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.
பிரபல பாடகி மறைவு
விக்டோரியா செக் குடியரசில் பிரபல பாடகி மற்றும் நகைச்சுவை நடிகராக இருந்தார்.
2004 இல் வெளியிட்ட அவரது முதல் ஆல்பம் "கில்லிங் மீ சாஃப்ட்லி" பெரும் புகழ் பெற்றது.
ASG இன்ஸ்பெக்ஷன் என்ற சர்வதேச நிறுவனத்தின் உரிமையாளரான டேவிட் 2014 இல் விக்டோரியாவை மணந்தார்.
இந்த சம்பவம் ஜூன் 11 அன்று நடந்ததாக கூறப்படுகிறது, துருக்கிய காவல்துறை விசாரணை நடத்தி வருகிறது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |