துருக்கிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பயணி: மின்தூக்கிக்கு அடியில் சடலமாக மீட்பு!
குடும்ப விடுமுறையில் துருக்கிக்கு சுற்றுலா சென்ற பிரித்தானிய பயணி ஒருவர் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய சுற்றுலா பயணி உயிரிழப்பு
துருக்கிக்கு விடுமுறைக்கு சென்ற பிரித்தானிய சுற்றுலா பயணி டைலர் கெர்ரி(Tyler Kerry) மின் தூக்கியின் அடிப்பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வெள்ளிக்கிழமை ஆண்டலியாவில்(Antalya) உள்ள ஹோட்டலில் தங்கியிருந்த எலெக்ஸில் உள்ள பாசில்டனை சேர்ந்த 20 வயது டைலர் கெர்ரி சடலமாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.
டைலர் கெர்ரியின் உடல் உள்ளூர் நேரப்படி காலை 7 மணிக்கு கண்டுபிடிக்கப்பட்டதாக அவரது மாமா தகவல் தெரிவித்துள்ளார்.
தொடங்கப்பட்ட GoFundMe பக்கம்
அவசர சேவைகள் தீவிரமாக முயற்சி செய்தும் டைலரை மீட்டெடுக்க முடியவில்லை, மேலும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்ததாக அறிவிக்கப்பட்டார்.
டைலரின் இறுதிச் சடங்கிற்கான செலவுகளை ஈடுகட்ட GoFundMe பக்கம் தொடங்கப்பட்டது, மேலும் இது ஏற்கனவே கிட்டத்தட்ட £5,000 ஐ திரட்டப்பட்டுள்ளது. குடும்பம் செவ்வாய் கிழமைக்குள் டைலர் கெர்ரியின் உடலை UK க்கு திருப்பி அனுப்ப விரும்புகிறது.
பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்திற்கு தூதரக அதிகாரிகள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |