ஜேர்மனியில் Volkswagen தொழிலாளர்கள் எச்சரிக்கை வேலைநிறுத்தம்
ஜேர்மனியில் Volkswagen தொழிலாளர்கள் எச்சரிக்கை வேலைநிறுத்தத்தை தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜேர்மனியின் முன்னணி கார் உற்பத்தியாளரான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தின் தொழிலாளர்கள், டிசம்பர் 4 முதல் எச்சரிக்கை வேலைநிறுத்தத்தை தொடங்க உள்ளனர்.
Volkswagen நிறுவனத்தின் ஊழியர் குறைப்புகள், ஊதியக் குறைப்புகள் மற்றும் தொழிற்சாலை மூடல் திட்டங்களை எதிர்த்து இவ்வேலைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனை, ஜேர்மனியின் மிகப்பாரிய தொழிற்சங்கமாகவும், ஐரோப்பாவின் மிகப்பாரிய தொழில்துறை தொழிற்சங்கமாகவும் உள்ள IG Metall தெரிவித்துள்ளது.
வோக்ஸ்வாகன் நிறுவனத்தின் தாயகமான ஜேர்மனியில் இதுபோன்ற எச்சரிக்கை வேலைநிறுத்தம் 2018 பிறகு முதல்முறையாக நடைபெறவுள்ளன.
வேலைநிறுத்தத்தின் பின்னணி
சீனாவில் இருந்து மலிவு விலையில் இறக்குமதியாகும் தயாரிப்புகள் மற்றும் ஐரோப்பாவில் குறையும் வாகன தேவை ஆகியவற்றால், Volkswagen பொருளாதார சிக்கல்களை சந்திக்கிறது.
இதை சமாளிக்க, ஊதியத்தை 10% குறைப்பதுடன் தொழில்சாலைகளை மூடுவது உள்பட கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் அவசியம் உள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது.
தொழிலாளர் சங்கத்தின் எதிர்ப்பு
2025 மற்றும் 2026-ஆம் ஆண்டுகளுக்கான போனஸ் வாய்ப்புகளை விட்டுக் கொடுப்பது போன்றவைகள் 1.5 பில்லியன் யூரோ செலவுகளை சேமிக்க உதவும் என்று IG Metall அறிவுறுத்தியது. ஆனால், Volkswagen நிறுவனம் இதை நிராகரித்தது.
"நிறுவன மேலாண்மை குழு, ஒப்பந்த உரையாடல்களை சீர்படுத்தாமல், தீயை மேலும் சுடர்விக்கும் வகையில் நடந்து கொண்டுள்ளது," என்று IG மெட்டல் மேலாளர் தோர்ஸ்டன் கிரோகர் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், Volkswagen தொழிலாளர்களின் முன்னாள் வேலைநிறுத்த ஒப்பந்தம் நவம்பர் 25 அன்று முடிவுக்கு வந்ததை அடுத்து, தொழிலாளர்கள் அனைத்து தொழிற்சாலைகளிலும் எச்சரிக்கை வேலைநிறுத்தங்களை தொடங்க உள்ளனர். வேலைநிறுத்தம் ஒரு சில மணி நேரங்களே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வோக்ஸ்வாகன் மற்றும் தொழிலாளர் சங்கம் டிசம்பர் 9 அன்று மீண்டும் சந்தித்து புதிய ஒப்பந்தத்துக்கு பேசுவார்கள். தொழிலாளர் சங்கம், ஒவ்வொரு தொழிற்சாலைக்கும் நீண்டகால திட்டம் உள்ளடக்கிய முன்மொழிவுகளுக்கு மட்டும் ஆதரவளிக்கப்படும் என்று உறுதியளித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு செய்திகளை உடனுக்குடன் அறிந்துக்கொள்ள லங்காசிறி WHATSAPP CHANNEL இல் இணையுங்கள். |
Germany Volkswagen, Volkswagen Germany, Volkswagen workers warning strikes Germany